Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 21, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் மாணவர் ஆங்கில மொழியில் தேர்ச்சிபெறுவது அவசியம்
[21 - April - 2008] [Font Size - A - A - A]
* வடக்கு மாகாண சபை உதவி செயலர் தெரிவிப்பு

பல்கலைக்கழகக் கல்விக்கு தெரிவாகும் மாணவர்கள் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியமாகும். பல்கலைக்கழகத்தில் முதல்தரப் பட்டதாரியாகச் சித்தியடைந்தாலும் ஆங்கிலத் தேர்ச்சி இல்லாவிட்டால் முன்னுக்கு வரமுடியாது என்று வடக்கு மாகாணசபையின் உதவிச் செயலாளர் ஆர்.உமாகாந்தன் திருகோணமலை மாவட்டப் பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்திய 2008 கலை, விஞ்ஞானம், வர்த்தகம், வினாடி வினாப்போட்டியின் நிறைவு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேசும்போது வலியுறுத்தினார்.

கடந்த சனிக்கிழமை திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் இந் நிகழ்வு திருகோணமலை நியூ செஞ்சுரி லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் உதவிச் செயலாளர் மேலும் பேசுகையில்;

"திருகோணமலை மாவட்டப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மாவட்டத்தின் கல்வித்துறை வளர்ச்சியுடன் மாவட்ட மக்களின் முன்னேற்றத்தையும் உறுதி செய்யும் முகமாக தனது செயற்றிட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும்".

ஒன்றியம் பல வழிகளில் மாவட்ட மக்களின் நலனைப் பேணும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்துள்ளதை பிரதம அதிதி பாராட்டினார். ஷ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் அதிபர் எம்.இராஜரத்தினம் பேசும் போது;

"கோட்டா அடிப்படையில் மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகக் கல்விக்கு தெரிவு செய்யப்படுவதற்குப் பதிலாக திறமையின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிபெறுவதற்கு ஏற்ற வகையில் மாணவர் சமுதாயத்தைத் தயார்படுத்தும் நடவடிக்கைகளை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட ரீதியில் கோட்டா அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தால் போதும் என்ற மன நிலையை மாற்றி அமைக்க வேண்டும்" என்றார்.

சிறப்பு அதிதியான கொழும்பு தும்பற நிறுவன எந்திரி ஆர். வருணன், திருமலை மாவட்டப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்றிட்டங்கள் மாவட்ட வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக அமைகின்றது என்று குறிப்பிட்டார். கடற்கோள் அனர்த்தம் ஏற்பட்ட போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருமலை மாவட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முதலில் களத்தில் இறங்கி உதவி செய்ததையும் வருணன் நினைவு கூர்ந்தார்.

வினா- விடைப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்குப் பரிசுகள், சான்றிதழ்களை அதிதிகள் வழங்கினர். கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Email this page Your Opinion Print this page
நீர்வீழ்ச்சி மரணங்கள் அதிகரிப்பு கடந்த வருடங்களில் 801 பேர் பலி
மனித உரிமை மீறல் சம்பவங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிப்பு
ஈரானுடனான நெருக்கத்தால் இலங்கைக்கான ஆயுத விற்பனையை இஸ்ரேல் நிறுத்துகிறது
பாண்டிருப்பில் கணவன், மனைவியான கிராமசேவகர்கள் சுட்டுக் கொலை
இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து மயிரிழையில் தப்பி தமிழகம் சென்ற அகதிகள்
பிரான்ஸின் புதிய தூதுவர் லயனல் நியமனம்?
பிள்ளையான் குழு உறுப்பினர் சுட்டுக்கொலை
அதிபர், உபஅதிபர், முன்னாள் ஆசிரியர் நாவலப்பிட்டியில் ரி.ஐ.டி.யினரால் கைது
ஷெல் தாக்குதலில் ஒருவர் படுகாயம்
மத்திய மாகாணத்தில் அனைத்து நடவடிக்கைகளுக்குமான கட்டளைத்தளபதியை அரசு அவசரமாக நியமித்தது
நுவரெலியா காரோட்டப் போட்டியில் ஒரு வீரர் பலி; இருவர் படுகாயம்
மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகளுடன் விமல் வீரவன்ச குழுவினர் சந்திப்பு
`இலங்கைக்கு எதிராக பொருளாதார இராஜதந்திர தடைகளை கனடா அமுல்படுத்த வேண்டும்'
இந்துசமய அறிவினையும் தத்துவங்களையும் வளர்க்க மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சு நடவடிக்கை
பல பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரி பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு
ஆட்சிமாற்றத்திற்குரிய தேர்தலாகவே இதனை தமிழ் பேசும் மக்கள் கருதுகின்றனர்
போலி வைத்தியர்களின் அதிகரிப்பால் உயிராபத்துக்குள்ளாகியிருக்கும் மக்கள்
கிழக்கு மாகாண சபை மன்றத்தின் செயலாளராக தியாகலிங்கம் நியமனம்
வெடி பொருட்கள் மீட்பு ஒருவர் தேடப்படுகிறார்
முன்னாள் இராணுவ மேஜர் அமைச்சருக்கு எதிராக மனு
பகவதி மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் ஹெல உறுமய வலியுறுத்தல்
கோஷ்டி மோதலில் ஒருவர் பலி; இருவர் காயம்
வெள்ளை வானில் கடத்தப்பட்ட லொறிச் சாரதியை காணவில்லையென முறைப்பாடு
கடைகளில் திடீர் சோதனை
கண்டியில் தேடுதல் 12 பேர் கைது
இலங்கையில் ஐ.நா.வின் பணிகளை முடக்குவதற்கு திரைமறைவில் திட்டங்கள்
சம்பூர் அனல் மின்நிலையம் நிர்மாணிக்கும் உடன்படிக்கையில் இலங்கை- இந்தியா கைச்சாத்து
வடகடல் நிறுவனத்தின் பணிகளை அதிகரிக்க ஐ.நா. அபிவிருத்தி திட்டம் 12.6 மி.ரூபா உதவி
கல்முனையில் மீன்பிடித் தொழிலை மேம்படுத்த படகு இறங்குதுறைகள் அமைக்க நடவடிக்கை
யாழ்.ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்குவதில் தாமதம்
பெருமளவான வள ஒதுக்கீடுகளை கல்விக்காக அரசு மேற்கொள்ளும் நிலையில் மாணவர்களும் பெருந்தொகை பணத்தினை செலவிடுகின்றனர்
பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் மாணவர் ஆங்கில மொழியில் தேர்ச்சிபெறுவது அவசியம்
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி க.பொ.த. (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறு
நித்தம்புவவில் தேடுதல் மூன்று தமிழர்கள் கைது
ஈரானிய அரசின் நிதி உதவியுடன் கிழக்கில் புதிய வீடமைப்புத் திட்டம்
தமிழ் - முஸ்லிம்களின் காணிகள் சூறையாடப்படுவதை தடுக்க கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசுக்கு பாடம் புகட்டுங்கள்
தேர்தலில் தோற்ற பின்னர் பாராளுமன்றத்துள் மீண்டும் நுழைவதற்கு ரவூப் ஹக்கீம் திட்டம்
கிழக்குமாகாண சபைத் தேர்தல் முஸ்லிம்களை பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தல் போன்றது
அஷ்ரப் மறைவுக்குப் பின் முஸ்லிம் மக்களுக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாதித்தது என்ன?
கிழக்குத் தேர்தலை வடக்கு , கிழக்கு இணைப்பு தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பாக கருதுகிறது முஸ்லிம் காங்கிரஸ்
அரிசிக்கு உத்தரவாத விலை அறிவிப்பு அரசாங்கத்தின் ஏமாற்று வித்தை
மாகாண நிர்வாக பொறுப்பிலிருந்து விடுபட்ட பாடசாலைகள் இன்று அநாதை நிலையில்
நெடுந்தீவில் அமோக நெல் விளைச்சல்
தொழிற்சங்கங்களின் பலத்தை காட்டுவதற்கன்றி தொழிலாளரின் விடுதலைக்காகவே மேதினம்
வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோரைப் பாதுகாக்க மில்லலான தோட்டத்தில் காவல் நிலையம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com