Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 21, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பெருமளவான வள ஒதுக்கீடுகளை கல்விக்காக அரசு மேற்கொள்ளும் நிலையில் மாணவர்களும் பெருந்தொகை பணத்தினை செலவிடுகின்றனர்
[21 - April - 2008] [Font Size - A - A - A]
* பிரதி கல்வி அமைச்சர் சச்சிதானந்தன்

அரசாங்கம் இலவசக் கல்விக்காக பெருந்தொகையான நிதி மற்றும் வள ஒதுக்கீடுகளை மேற்கொண்டு வரும் நிலையில், மேலதிக கல்விக்காக மாணவர்கள் ஏன் பிரத்தியேக வகுப்புக்கு செல்ல வேண்டுமென பிரதி கல்வி அமைச்சர் மு. சச்சிதானந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கற்பித்தலை முறையாக மேற்பார்வை செய்யவென, வலய மற்றும் கோட்ட அதிகாரிகள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பல மட்டங்களில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் மேலதிக கல்விக்காக வேறு இடங்களுக்கு ஏன் செல்லவேண்டி ஏற்படுகின்றது எனவும் அவர் தனது அறிக்கையில் வினவியுள்ளார்.

மாணவர்களுக்கான கற்பித்தல் பணியை உரிய முறையில் மேற்பார்வை செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், சமகால கல்வி நிலைமைகளின் போக்கு தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்கள் நடாத்துவதற்குப் பதிலாக ரியூசன் வகுப்புக்களை நடாத்துகின்றார்கள். மாணவர்களுக்கு பாடசாலைகளில் சிறந்த முறையில் கல்வி கற்பித்தால் அவர்கள் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்படாது. கல்வி அமைச்சு இலவசக் கல்விக்கென பெருந்தொகையான பணத்தினை ஒதுக்கும்போது மாணவர்கள் பணம் கொடுத்து கற்கின்ற நிலையை ஒருபோதும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஓரிரு பாடசாலைகளில் ஆசிரியர்கள் பிரத்தியேக வகுப்புக்களை நடாத்துகின்றார்கள். உண்மையில் இது வரவேற்கத்தக்கது. இவர்களைப் போன்று ஆசிரியர்கள் ஒவ்வொருவரும், சேவை அடிப்படையில் மாணவர்களுக்கு கல்வியினை வழங்க வேண்டும். மாணவர்களை இனங்கண்டு அவர்களின் தரங்களுக்கேற்ப வகுப்புக்களை பிரிவுகளாக பிரித்து கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும்.

பாடசாலைகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் செயற்பாடானது, காலத்திற்கு காலம் மாற்றியமைக்கப்படுகின்றது. அதனடிப்படையில் ஆசிரியர்கள் செயல்படுகின்றார்களா என ஆசிரிய ஆலோசகர்கள் பாடசாலைகளுக்கு சென்று பார்வையிட வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளின் மூலமே மாணவர்களின் பெறுபேறுகளை சிறப்பானதாக உயர்த்த முடியும்.

இலங்கையின் கல்விமுறையில் அளவுரீதியிலான வளர்ச்சி ஏற்பட்டாலும் தரமான கல்வி வளர்ச்சி ஏற்பட்டுவிட்டதென கூறிவிடமுடியாது. எமக்குள்ள அடுத்த சவால், நாட்டில் அனைவருக்கும் தரமான கல்வியினை வழங்குவதாகும். ஒரு பாடசாலையானது தரமான கல்வியினை வழங்குகின்றதா என்பதை அப்பாடசாலை சார்ந்த சமூகத்தின் வெளிப்பாட்டின் மூலமே இனங்காண முடியும்.

கல்வி என்பது நாளைய சமூகத்திற்கான நபர்களை இன்று தயார்படுத்துவதாகும். சமூகத்திற்கு பயன்படாதோரை சமூகத்திற்கு வழங்குவது நிறுத்தப்படுவதன் மூலமே தரமான கல்வியை பாடசாலை வழங்குகின்றது எனக்கொள்ள முடியும்.

பாடசாலைகளும் வகுப்பறைகளும் அறிவினை மாணவர்கள் நுகரும் இடமாக இருக்கும் நிலை மாற்றப்பட்டு, அறிவினை உற்பத்தி செய்யும் இடமாக மாற்றப்படல் வேண்டும். அதில் மாணவர்களும் ஆசிரியர்களும் பங்குகொள்ளல் வேண்டும்.

மாணவர்கள் விரிவுரைகளின் போது பேசா மடந்தைகளாக வாசிக்கப்படும் குறிப்புக்களை மட்டும் எழுதி வைக்கும் ஆட்களாகவன்றி கற்றலில் சுறுசுறுப்பாக பங்குபற்றுபவர்களாக மாற வேண்டும். பாடசாலைகள் வெறுமனே கற்பித்தல் நிறுவனங்களாக அன்றி பூரணமான கல்விக் காரியாலயங்களாக மாறவேண்டும்.

அறிவினை பெறல், திறனை வளர்த்தல், நல்ல மனப்பாங்கினை உருவாக்கல் என்பன பாடசாலையில் இடம்பெறல் வேண்டும். அதாவது, மாணவர்கள் தமக்கு ஒப்படைக்கப்பட்ட பணியினை நேர்த்தியாக செய்து முடிக்கத் தேவையான ஆற்றல்கள் வளர்க்கப்படல் வேண்டும்.

மாணவன் தனக்கும், தனது குடும்பத்திற்கும் பயன்படக்கூடியவனாக உருவாக்கப்பட வேண்டும். தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் பயன்தரக்கூடிய பயன்பாட்டுக்குரிய மனவளத்தினை உருவாக்கி வழங்க வேண்டிய பணி கல்வியை போதிக்கின்ற ஆசிரியர்கள் அதிபர்களின் கடமையாகும்.

மேற்கூறிய இலக்குகள் நிறைவுபெற பாட உள்ளடக்கம், அப்பாடத்தினை கற்பிக்கின்ற முறை என்பன காலத்திற்கு காலம் மாற்றியமைக்கப்படல் வேண்டும். பாடசாலைகளில் மாணவர்களின் ஆளுமை விருத்திக்கான சகல செயற்பாடுகளும் முறையாக இடம்பெறுவது அவசியமென்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Email this page Your Opinion Print this page
நீர்வீழ்ச்சி மரணங்கள் அதிகரிப்பு கடந்த வருடங்களில் 801 பேர் பலி
மனித உரிமை மீறல் சம்பவங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிப்பு
ஈரானுடனான நெருக்கத்தால் இலங்கைக்கான ஆயுத விற்பனையை இஸ்ரேல் நிறுத்துகிறது
பாண்டிருப்பில் கணவன், மனைவியான கிராமசேவகர்கள் சுட்டுக் கொலை
இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து மயிரிழையில் தப்பி தமிழகம் சென்ற அகதிகள்
பிரான்ஸின் புதிய தூதுவர் லயனல் நியமனம்?
பிள்ளையான் குழு உறுப்பினர் சுட்டுக்கொலை
அதிபர், உபஅதிபர், முன்னாள் ஆசிரியர் நாவலப்பிட்டியில் ரி.ஐ.டி.யினரால் கைது
ஷெல் தாக்குதலில் ஒருவர் படுகாயம்
மத்திய மாகாணத்தில் அனைத்து நடவடிக்கைகளுக்குமான கட்டளைத்தளபதியை அரசு அவசரமாக நியமித்தது
நுவரெலியா காரோட்டப் போட்டியில் ஒரு வீரர் பலி; இருவர் படுகாயம்
மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகளுடன் விமல் வீரவன்ச குழுவினர் சந்திப்பு
`இலங்கைக்கு எதிராக பொருளாதார இராஜதந்திர தடைகளை கனடா அமுல்படுத்த வேண்டும்'
இந்துசமய அறிவினையும் தத்துவங்களையும் வளர்க்க மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சு நடவடிக்கை
பல பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரி பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு
ஆட்சிமாற்றத்திற்குரிய தேர்தலாகவே இதனை தமிழ் பேசும் மக்கள் கருதுகின்றனர்
போலி வைத்தியர்களின் அதிகரிப்பால் உயிராபத்துக்குள்ளாகியிருக்கும் மக்கள்
கிழக்கு மாகாண சபை மன்றத்தின் செயலாளராக தியாகலிங்கம் நியமனம்
வெடி பொருட்கள் மீட்பு ஒருவர் தேடப்படுகிறார்
முன்னாள் இராணுவ மேஜர் அமைச்சருக்கு எதிராக மனு
பகவதி மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் ஹெல உறுமய வலியுறுத்தல்
கோஷ்டி மோதலில் ஒருவர் பலி; இருவர் காயம்
வெள்ளை வானில் கடத்தப்பட்ட லொறிச் சாரதியை காணவில்லையென முறைப்பாடு
கடைகளில் திடீர் சோதனை
கண்டியில் தேடுதல் 12 பேர் கைது
இலங்கையில் ஐ.நா.வின் பணிகளை முடக்குவதற்கு திரைமறைவில் திட்டங்கள்
சம்பூர் அனல் மின்நிலையம் நிர்மாணிக்கும் உடன்படிக்கையில் இலங்கை- இந்தியா கைச்சாத்து
வடகடல் நிறுவனத்தின் பணிகளை அதிகரிக்க ஐ.நா. அபிவிருத்தி திட்டம் 12.6 மி.ரூபா உதவி
கல்முனையில் மீன்பிடித் தொழிலை மேம்படுத்த படகு இறங்குதுறைகள் அமைக்க நடவடிக்கை
யாழ்.ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்குவதில் தாமதம்
பெருமளவான வள ஒதுக்கீடுகளை கல்விக்காக அரசு மேற்கொள்ளும் நிலையில் மாணவர்களும் பெருந்தொகை பணத்தினை செலவிடுகின்றனர்
பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் மாணவர் ஆங்கில மொழியில் தேர்ச்சிபெறுவது அவசியம்
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி க.பொ.த. (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறு
நித்தம்புவவில் தேடுதல் மூன்று தமிழர்கள் கைது
ஈரானிய அரசின் நிதி உதவியுடன் கிழக்கில் புதிய வீடமைப்புத் திட்டம்
தமிழ் - முஸ்லிம்களின் காணிகள் சூறையாடப்படுவதை தடுக்க கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசுக்கு பாடம் புகட்டுங்கள்
தேர்தலில் தோற்ற பின்னர் பாராளுமன்றத்துள் மீண்டும் நுழைவதற்கு ரவூப் ஹக்கீம் திட்டம்
கிழக்குமாகாண சபைத் தேர்தல் முஸ்லிம்களை பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தல் போன்றது
அஷ்ரப் மறைவுக்குப் பின் முஸ்லிம் மக்களுக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாதித்தது என்ன?
கிழக்குத் தேர்தலை வடக்கு , கிழக்கு இணைப்பு தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பாக கருதுகிறது முஸ்லிம் காங்கிரஸ்
அரிசிக்கு உத்தரவாத விலை அறிவிப்பு அரசாங்கத்தின் ஏமாற்று வித்தை
மாகாண நிர்வாக பொறுப்பிலிருந்து விடுபட்ட பாடசாலைகள் இன்று அநாதை நிலையில்
நெடுந்தீவில் அமோக நெல் விளைச்சல்
தொழிற்சங்கங்களின் பலத்தை காட்டுவதற்கன்றி தொழிலாளரின் விடுதலைக்காகவே மேதினம்
வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோரைப் பாதுகாக்க மில்லலான தோட்டத்தில் காவல் நிலையம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com