யாழ். குடாநாட்டு ஊடகவியலாளர்களுக்கான கௌரவிப்பு மற்றும் விருது வழங்குவதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும், சுவீடனைத்தளமாகக் கொண்டு இயங்கும் `பேஜோ' நிறுவனமும் எடுத்த முயற்சி கடந்த ஆறு மாதங்களாக நடைபெறாதிருப்பது குறித்து விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்த நிறுவனம் யாழ். குடாநாட்டு ஊடகவியலாளர்களிடம் இருந்து விண்ணப்பங்களை நவம்பர் மாதம் கோரியிருந்தது.
அத்துடன், இந்த ஊடகவியலாளர்களால் வெளியிடப்பட்ட செய்திகள், கட்டுரைகள் என்பவற்றின் பிரதியும் கேட்டிருந்தது.
இதன்படி யாழ். குடாநாட்டு ஊடகவியலாளர்கள் தமது விண்ணப்பங்களையும் கேட்கப்பட்ட செய்திகள், கட்டுரைகளையும் சமர்ப்பித்திருந்தனர்.
ஆனால், இது தொடர்பாக விருது வழங்கும் நிகழ்வு கடந்த ஆறு மாதங்களாகவும் மேற்கொள்ளப்படவில்லை என யாழ் குடாநாட்டு ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.