|
கண்டி நகரில் சனிக்கிழமை மாலை பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட பன்னிரண்டு பேரைக் கைது செய்துள்ளனர்.
இதில் சட்டவிரோதமாக மின்சார இணைப்பைப் பெற்றுக்கொண்ட ஐந்து பேர், கஞ்சா வைத்திருந்த ஐந்து பேர், சாராயம் வைத்திருந்த ஒருவர் உட்பட பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். |