அநுராதபுரம் பொது சுகாதாரப் பகுதியினர் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கெக்கிராவ, சிராவஸ்திபுரம், தமுத்தேகம ஆகிய பகுதிகளில் உள்ள உணவுக் கடைகள், வர்த்தக நிலையங்களில் திடீர் தேடுதலை மேற்கொண்டனர்.
இதன்போது எட்டு கடைகளில் திகதி காலாவதியான குளிர்பானப் போத்தல்கள், பேரிச்சம்பழம், பழுதடைந்த மாசிக்கருவாடு, பைக்கற்றில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக இவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
உணவுக் கடைகளை சுத்தமாகப் பேணுமாறும் சுகாதாரப் பகுதியினர் அறிவுறுத்தியிருந்தனர்.