தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்றின் மீது கற்கள் வீசப்பட்டது தொடர்பாக இருதரப்பினரிடையே இடம்பெற்ற கோஷ்டி மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். இருவர் கடுங் காயங்களுக்குள்ளாகி பதுளை அரசினர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெலிமடைப் பகுதியைச்சேர்ந்த போகாகும்பர தோட்டத்தின் கந்தையா சிவஞானம் என்பவரே இந்த மோதலில் தாக்கப்பட்டு மரணமானார். இவரது மனைவி எஸ்.செல்வராணி, அவரது தாயார் கே.சின்னம்மா ஆகிய இருவரும் கடுங் காயங்களுக்குள்ளாகி பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை காலை இடம்பெற்ற இச்சம்பவத்தினால் குறிப்பிட்ட தொழிலாளர் குடியிருப்பு பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக வெலிமடைப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து சந்தேகத்தின் பேரில் இருவர் கைதாகியிருப்பதுடன் மேலும் நால்வர் தேடப்பட்டு வருகின்றனர்.