சர்வதேச முக்கிய பிரமுகர்கள் குழுவின் தலைவரும் முன்னாள் இந்தியப் பிரதமருமான பி.என்.பகவதி மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜாதிக ஹெல உறுமய ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக் குழுவின் விசாரணைகளை கண்காணிப்பதற்கு நியமிக்கப்பட்ட சர்வதேச முக்கிய பிரமுகர்கள் குழுவின் தலைவரான பகவதி தனக்கு வழங்கப்பட்ட பணியினை உரிய முறையில் செய்யாதமைக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி ஆணைக் குழுவின் விசாரணைகள் குறித்து பகவதி தலைமையிலான குழுவினர் முழுமையான அறிக்கை ஒன்றை கையளிக்கத் தவறிவிட்டதாக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிசாந்த சிறி வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மீது சர்வதேச நாடுகள் தவறான பார்வையைச் செலுத்துவதற்கு, சர்வதேச முக்கிய பிரமுகர்கள் குழுவின் தவறான அறிக்கைகளே காரணம் என்றும் அவ்வாறு தவறான அறிக்கைகளை ஊடகங்களுக்கு வெளியிட்ட பகவதி குழுவினர், தமது பணியின் பிரதான அம்சமான விசாரணைகள் தொடர்பான தமது அவதானங்களை ஜனாதிபதிக்கும் சட்டமா அதிபருக்கும் வழங்க தவறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.