அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேக்கு எதிராக ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் அத்துல ரட்னாயக்க என்பவர் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அமைச்சர் அளுத்கமகே தனது பாதுகாப்பு பிரிவினருடன் இணைந்து தன் மீது தாக்குதல் நடத்தியதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தான் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது அமைச்சரின் வாகன அணி தனது வாகனத்துக்குப் பின்னால் வந்ததாகவும் அப்போது தனது வாகனத்துக்கு முன்பாக செல்ல அமைச்சரின் வாகனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று காரணம் கூறி தன் மீது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தனது 3 லட்சம் ரூபா பணம் காணாமல்போனதாகவும் தனது வாகனமும் சேதமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.