கல்பிட்டியில் கருங்கற்கள் ஏற்றிச் சென்ற லொறியில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குளியாப்பிட்டிய வாசி ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
கடந்த புதன்கிழமை இரவு இந்த லொறி பொலிஸாரால் சோதனையிடப்பட்டபோது ஜெக்நைற் குச்சிகளும் வயர்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் இந்த வெடிபொருட்களை குளியாப்பிட்டியவில் ஒருவரிடம் வாங்கியதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து, அந்த நபரை பொலிஸார் தேடிவருகின்றனர்.