கிழக்கு மாகாண சபை மன்றத்தின் செயலாளராக இ. தியாகலிங்கம் இம்மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளராக இவர் பதவி வகித்து வந்தார். கிழக்கு மாகாண சபை தனியாகப் பிரிக்கப்பட்ட பின்னர் சிறிது காலம் கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராகவும் பணியாற்றியிருந்தார். கிழக்கு மாகாணச் சபைத் தேர்தல் மே மாதம் 10 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. தேர்தலின் பின்னர் 37 உறுப்பினர்களைக் கொண்டதாக கிழக்கு மாகாண சபையின் அசெம்பிளி அமையும். இவர்களில் 35 பேர் தெரிவு செய்யப்பட்டவர்களாக இருப்பர். மற்றும் இருவர், போனஸ் அடிப்படையில் கூடுதல் வாக்குகளைப் பெறும் கட்சி அல்லது குழுவின் சார்பில் இடம்பெறுவர்.
கிழக்கு மாகாண சபை மன்றத்தின் பிரதிச் செயலாளராக எஸ்.நடராஜா நியமிக்கப்பட்டிருக்கின்றார். இவர் இதுவரை கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக் குழுவின் உதவிச் செயலாளராகக் கடமையாற்றி வந்தார்.