நாட்டில் 40 ஆயிரம் போலி வைத்தியர்கள் கடமையாற்றுவதால் பொதுமக்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் உயிராபத்துகளுக்கும் ஆளாகிவருவதாக அரசாங்க வைத்தியர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், நாடளாவிய ரீதியில் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட 15 ஆயிரம் வைத்தியர்கள் மாத்திரம் கடமையாற்றுகின்ற நிலையில் போலி வைத்தியர்கள் 40 ஆயிரம் பேர் கடமையாற்றுவது உண்மையான அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களுக்கு அபகீர்த்தியையும் அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்துவதாகக் குற்றம் சாட்டுகிறது அரச வைத்தியர்கள் சங்கம்.
இவ்வாறான போலி வைத்தியர்கள் மூலம் தவறான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு நோயாளிகள் மரணத்தைத் தழுவக்கூடிய நிலை காணப்படுவதாகவும் தெரிவித்திருக்கும் வைத்தியர்கள் சங்கம் போலி வைத்தியர்களைத் தேடி கண்டுபிடித்து சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.