இலங்கை அரசுக்கெதிராக பொருளாதார மற்றும் இராஜதந்திரத் தடைகளை விதிக்கும் படி கனடா அரசிடம் கோரவுள்ளதாக கனடா சட்டத் தரணிகள் சங்கமும் கனேடிய தமிழ் அமைப்புகளும் தெரிவித்துள்ளன.
அண்மையில் நடைபெற்ற கொண்சர்வேட்டிவ் கட்சியின் நிதிசேகரிப்பு விருந்து பசாரம் ஒன்றிலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கனடா கொண்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளர் சுக் கொங்கெல் தெரிவிக்கையில்;
இலங்கையில் அடிப்படை மனித உரிமை மீறல் சம்பவங்கள் மிகவும் கொடூரமான முறையில் முன்னெடுக்கப்படுவதுடன், சட்டத்துக்கு முரணான வகையிலும் இவை முன்னெடுக்கப்படுகின்றன.
அத்துடன், இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்கு ஐ.நா.வின் விஷேட குழுவினரை இலங்கைக்கு அனுப்ப ஐக்கிய நாடுகள் சபைக்கு கனடா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் இக்குழு கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதுடன், சமாதான முன்னெடுப்புகளிலும் உதவியாகச் செயற்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.