படையினரின் ஆட்லெறி ஷெல் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பளை சோரன்பற்று பகுதியில் படையினரின் ஆட்லெறி ஷெல்கள் விழுந்து வெடித்ததில் அவர் ஒரு கையை இழந்துள்ளார்.
கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் முரசுமோட்டை 4 ஆம் கட்டையைச் சேர்ந்த சின்னையா ஜெயச்சந்திரன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.