அதிபர், உபஅதிபர், முன்னாள் ஆசிரியர்
நாவலப்பிட்டியில் ரி.ஐ.டி.யினரால் கைது
|
| [21 - April - 2008] [Font Size - A - A - A] |
|
|
அட்டன், டெம்ஸ்டோன் தமிழ் பாடசாலையின் அதிபர், உபஅதிபர் உட்பட மேலுமொருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் (ரி.ஐ.டி.) நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பயங்கரவாத தடுப்பு புலனாய்வுப் பிரிவின் விசேட குழுவொன்று நேற்று அதிகாலை நாவலப்பிட்டிக்கு சென்று டெம்ஸ்டோன் பாடசாலை அதிபரான விஸ்வநாதனையும் அப்பாடசாலை உபஅதிபரான பூபாலசிங்கம் மற்றும் அப் பாடசாலையில் தொண்டராசிரியராக முன்பு சேவையாற்றிய ராமச்சந்திரனையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரே இவர்களை கைது செய்துள்ளதாகவும் இது தொடர்பாக தனது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் எஸ்.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். |
|