வாழைச்சேனை பேத்தாளை பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு பிள்ளையான் குழுவைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பேத்தாளை வை.எம்.சி.ஏ. வீதியில் சனிக்கிழமை இரவு 8 மணியளவில், தனது வீட்டின் முன்பாக இவர் மற்றொருவருடன் கதைத்துக் கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளொன்றில் வந்தவர்களே இவரை சுட்டுக் கொன்றுவிட்டுச் சென்றுள்ளனர்.
பிள்ளையான் குழுவைச் சேர்ந்த கணேசன் சுதர்சன் (28 வயது) என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவராவார்.
இவரது சடலம் பின்னர் வாழைச்சேனை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டது. நேற்று அந்தப் பகுதியில் படையினர் சுற்றிவளைப்புத் தேடுதலை நடத்தினர்.