பிரான்ஸுக்கான புதிய இலங்கைத் தூதுவராக லயனல் பெர்னாண்டோ நியமிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.
இதற்கு முன்னர் லக்ஷ்மன் கதிர்காமர் வெளியுறவு அமைச்சராக பணியாற்றிய காலத்தில் அந்த அமைச்சின் செயலாளராக லயனல் பெர்னாண்டோ பணியாற்றியிருந்தார்.
பிரான்ஸுக்கான புதிய தூதுவர் பதவி லயனல் பெர்னாண்டோவுக்கு கிடைப்பது சாத்தியம் என்பது நம்பகமான வட்டாரங்களில் இருந்து அறியக் கிடைத்திருந்த போதிலும், இது குறித்த தீர்மானம் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.
ஏற்கனவே, இந்த வெற்றிடத்துக்கு காலம் சென்ற முன்னாள் வெளிநாட்டமைச்சரான டிரோன் பெர்னாண்டோவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் அதற்கு முன்னர் அவர் காலமானார்.
லயனல் பெர்னாண்டோ யாழ். அரசாங்க அதிபராக பணியாற்றியதோடு, நெதர்லாந்து நாட்டுக்கான இலங்கைத் தூதுவராக ஏற்கனவே பணியாற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.