* மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக மனித உரிமை மீறல்கள் மோசமடைந்து செல்வதாக மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும் இந்த நிலை மோசமடைந்து செல்வதாகவும் அது கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளதாவது;
வெள்ளைவானில் கடத்தப்படுவோர் தொகை அதிகரித்து செல்கிறது. இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாத அச்ச சூல்நிலையில் உள்ளனர்.
அண்மைக்காலத்தில் 20 இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளனர் இவர்கள் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் மார்ச் வரை கடத்தப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களில் 100 மனித உரிமைக மீறல் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பாலானாவை கிராமப் புறங்களில் இருந்தே கிடைக்கப் பெற்றுள்ளன.
அத்தோடு, இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாகன முறைப்பாடுகளில் எதிரானவையாக உள்ளதாம்.
பொலிஸ் நிலையங்களுக்கு சென்று தமது மனித உரிமை மீறல்கள் குறித்து முறைப்பாடு செய்ய முற்படுகின்ற போதிலும் அவைகளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் செவிமடுப்பதில்லையென குற்றம்சாட்டப்படுகிறது.