Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 21, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
இலங்கையில் முதல் தடவையாக நடைபெறும் ஆசிய தலைவர் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி
[21 - April - 2008] [Font Size - A - A - A]
-ஏ.தேவராஜா-

இலங்கையில் முதல் தடவையாக நடைபெற விருக்கும் ஆசியத் தலைவர் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி எதிர்வரும் 23 ஆம் திகதி புதன்கிழமை முதல் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் நடை பெறவுள்ளது.

இப்போட்டியில் 11 ஆசிய முன்னணி விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றுகின்றன. இவை 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஏ.பிரிவில் பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாள அணியும் பி-பிரிவில், கம்போடியா, தாய்வான், கிர்கிஸ்தான் அணியும் சி-பிரிவில் இலங்கையின் சார்பில் பங்குபற்றும் ரட்ணம் கழகம், பூட்டான், மியன்மார், துர்க்மெனிஸ்தான் அணியும் பங்குபற்றுகின்றன.

ஏ-பிரிவு ஆட்டங்கள் நேபாளத்திலும், பி-பிரிவு ஆட்டங்கள் தாய்வானிலும், சி-பிரிவு ஆட்டங்கள் இலங்கையிலும் நடைபெறவுள்ளன.

23 ஆம் திகதி புதன்கிழமை, சுகததாச விளையாட்டு அரங்கில் பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமாகும் 1 ஆவது போட்டியில், துர்க்மெனிஸ்தான் அணியை எதிர்த்து மியன்மார் அணி போட்டியிடும், 6.30 மணிக்கு நடைபெற இருக்கும் 2 ஆவது போட்டியில், ரட்ணம் கழகத்தை எதிர்த்து பூட்டான் ரான்ஸ்போட் யுனைற்ரெட் கழகம் மோதும்.

25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 4 மணிக்கு நடைபெற விருக்கும் 1 ஆவது போட்டியில், பூட்டான் ரான்ஸ்போட் யுனைற்ரெட் கழகத்தை எதிர்த்து துர்க்மெனிஸ்தான் அணி மோதும் 6.30 மணிக்கு நடைபெற விருக்கும் 2 ஆவது போட்டியில், ரட்ணம் கழகத்தை எதிர்த்து மியன்மார் அணி போட்டியிடும்.

27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 4 மணிக்கு நடைபெறவிருக்கும் 1 ஆவது போட்டியில், பூட்டான் ரான்ஸ்போட் யுனைற்ரெட் கழகத்தை எதிர்த்து மியன்மார் அணி போட்டியிடும். 6.30 மணிக்கு நடைபெறவிருக்கும் 2 ஆவது போட்டியில் ரட்ணம் கழகத்தை எதிர்த்து துர்க்மெனிஸ்தான் அணி மோதும்.

Email this page Your Opinion Print this page
செவாக்கின் டில்லி டேர்டெவில்ஸிடம் வோர்னின் ராஜஸ்தான் ரோயல் தோல்வி
அவுஸ்திரேலியாவின் ஹசி அதிரடி ஆட்டம் சென்னை சுப்பகிங்ஸிடம் கிங்ஸ் பஞ்சாப் வீழ்ந்தது
செவாக்கின் டில்லி டேர்டெவில்ஸிடம் வோர்னின் ராஜஸ்தான் ரோயல் தோல்வி
முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வி வீரர்களின் வெற்றி உணர்வை தணிக்காது
சாம்பியன் கிண்ணப் போட்டியின் முதல் ஆட்டம் பாகிஸ்தான் - மேற்கிந்திய அணிகள் மோதுகின்றன
ஐ.பி.எல். தொடரில் இங்கிலாந்து வீரர்கள் நிச்சயம் விளையாடும் வாய்ப்பு கிட்டும்
இலங்கையில் முதல் தடவையாக நடைபெறும் ஆசிய தலைவர் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி
இலங்கை உதைபந்தாட்ட அணி கால் இறுதி ஆட்டத்துக்கு தெரிவு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com