Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 21, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
ஐ.பி.எல். தொடரில் இங்கிலாந்து வீரர்கள் நிச்சயம் விளையாடும் வாய்ப்பு கிட்டும்
[21 - April - 2008] [Font Size - A - A - A]
* வோகன் கூறுகிறார்

ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க இங்கிலாந்து வீரர்கள் ஆர்வமாக இருப்பதாக, அந்த அணிக் கப்டன் மைக்கேல் வோகன் கூறியுள்ளார்.

ஐ.பி.எல். `ருவென்ரி - 20' தொடரில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க அந்நாட்டு கிரிக்கெட் சபை அனுமதி வழங்கவில்லை. கவுன்டி போட்டிகள் மற்றும் ஐ.பி.எல். ஆகிய இரண்டின் அட்டவணையும் ஒரே சமயத்தில் அமைந்திருப்பதை இதற்கு காரணம் காட்டி வருகிறது.

ஆனால், இங்கிலாந்து வீரர்கள் இதில் பங்கேற்க ஆர்வமாக இருக்கின்றனர். நிச்சயம் ஒரு நாள் இங்கிலாந்து வீரர்களால் இத்தொடரில் விளையாட முடியுமென இங்கிலாந்து வீரர் மைக்கேல் வோகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில்; "ஐ.பி.எல். தொடர் கிரிக்கெட் வீரர்களுக்கு பணத்தை வாரி வழங்குகிறது. விரைவில் பணம் சம்பாதிக்க இதைவிட நல்ல வாய்ப்பு எதுவுமிருக்காது. சர்வதேச அனுபவம் வாய்ந்த வீரர்கள் அதிகம் இருப்பதால் போட்டியும் சர்வதேச தரத்துக்கு இருக்கும்.

அதிரடியான இத்தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைக்கும். தற்போதைய தொடரில் இங்கிலாந்தை தவிர்த்து அனைத்து அணிகளைச் சேர்ந்த முக்கிய வீரர்களும் விளையாடுகின்றனர். எங்களால் பங்கேற்க முடியாதது வருத்தமளிக்கிறது. போட்டிகளை `ரி.வி'யில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்" என்றார்.

Email this page Your Opinion Print this page
செவாக்கின் டில்லி டேர்டெவில்ஸிடம் வோர்னின் ராஜஸ்தான் ரோயல் தோல்வி
அவுஸ்திரேலியாவின் ஹசி அதிரடி ஆட்டம் சென்னை சுப்பகிங்ஸிடம் கிங்ஸ் பஞ்சாப் வீழ்ந்தது
செவாக்கின் டில்லி டேர்டெவில்ஸிடம் வோர்னின் ராஜஸ்தான் ரோயல் தோல்வி
முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வி வீரர்களின் வெற்றி உணர்வை தணிக்காது
சாம்பியன் கிண்ணப் போட்டியின் முதல் ஆட்டம் பாகிஸ்தான் - மேற்கிந்திய அணிகள் மோதுகின்றன
ஐ.பி.எல். தொடரில் இங்கிலாந்து வீரர்கள் நிச்சயம் விளையாடும் வாய்ப்பு கிட்டும்
இலங்கையில் முதல் தடவையாக நடைபெறும் ஆசிய தலைவர் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி
இலங்கை உதைபந்தாட்ட அணி கால் இறுதி ஆட்டத்துக்கு தெரிவு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com