* டிராவிட் கூறுகிறார்
கொல்கத்தா நைற் ரைடர்ஸ் அணிக்கு எதிரான தலை குனிவுத் தோல்வி வீரர்களின் வெற்றி உணர்வைத் தணிக்காது என பெங்களூர் ரோயல் சாலஞ்சர்ஸ் அணியின் கப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் ஐ.பி.எல். போட்டியில் கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைற் ரைடர்ஸ் அணியிடம் 140 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டிராவிட் அணி பரிதாபமாகத் தோற்றுப்போனது. அதன் பின்னர் ராவிட் செய்தியாளர்களிடம் பேசுகையில்;
"எதிரணியில் இடம்பெற்றிருந்த நியூசிலாந்தின் பிரென்டன் மெக்கலத்தின் ஆட்டம் மிக அற்புதமாக இருந்தது. அவருக்குத் தலைவணங்குகிறேன். ஆடுகளம் எப்படியிருந்தாலும் அவர் நிலைத்து அதிரடியாக ஆடினார். இத் தோல்வியால் அணியினர் நிலைகுலைந்து போக மாட்டார்கள்.
ஐ.பி.எல். தொடர் மிகவும் அதிகமான போட்டிகளைக் கொண்டது. எங்களுக்கு இன்னும் அதிகமான ஆட்டங்கள் உள்ளன. ஆதலால் ஒரு தோல்வி வீரர்களின் வெற்றி உணர்வைப் பாதிக்காது . மீண்டெழுவோம்" என்றார்.
இதேநேரம், மும்பையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பெங்களூர் ரோயல் சாலஞ்சர்ஸ் அணி விளையாடியது.