ஜப்பான் புதிய இராணுவக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆலோசித்து வருகிறது.
உலகின் பொருளாதார வல்லரசான ஜப்பானில் இராணுவத்தை வலுப்படுத்துவது தொடர்பான கொள்கைகளை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மறு பரிசீலனை செய்வது வழக்கம். கடந்த 1995 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் மட்டும் சர்வதேச சூழ்நிலைகளுக்கு ஏற்ப சில மாற்றங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. 2009 ஆம் ஆண்டிலும் இலகுவான மாற்றங்களை மட்டுமே செய்ய முதலில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால், அண்டைய நாடான சீனாவில் இராணுவத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதால், ஜப்பான் புதிய முடிவை எடுத்துள்ளது. அதன் படி இராணுவத்துக்கு புதிய கொள்கையை உருவாக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. முதற்கட்டமாக வல்லுநர்கள் குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அமைச்சரவை ஒப்புதலைப் பெற்று புதிய கொள்கைகள் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.