கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளராக றவூப் ஏ.மஜீட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்தவினால் இந்நியமனம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் மட்டக்களப்பு மாவட்ட ஷ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதம அமைப்பாளராகவுள்ளார்.
இதையடுத்து அவர் ஆளும் கட்சியின் வெற்றிக்கான சகல தரப்பினருடன் கலந்துரையாடி வருவதுடன் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதன் மூலமே அதிக முஸ்லிம் உறுப்பினர்களை பெற்று முஸ்லிம் முதலமைச்சரை பெற்றுக் கொள்ள முடியுமென்று தீவிர பிரசாரங்களை முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமைச்சர்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றார்.