|
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் ஏ.எம்.றியாஸை ஆதரித்து நடைபெற்ற கல்முனைப் பிரதேசத்தின் முதலாவது பிரசாரக் கூட்டம் வெள்ளிக்கிழமை கல்முனைக்குடி கடற்கரை பள்ளிவாசல் முற்றவெளியில் நடைபெற்றது.
பெரும் திரளான மக்கள் கலந்துகொண்ட இப்பொதுக் கூட்டத்தில் மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த சேவைகள் அமைச்சர் றிஸாத் பதியுதீன், வீடமைப்பு பொதுவசதிகள் அமைச்சர் திருமதி பேரியல் அஷ்ரப், மக்கள் பெருந்தோட்ட முகாமைத்துவ மற்றும் அபிவிருத்திப் பிரதியமைச்சர் எஸ்.நிஜாமுதீன், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீது, உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜித், முன்னாள் பிரதியமைச்சர் எம்.ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா உட்பட திகாமடுல்ல மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களும் கலந்துகொண்டனர். |