அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு மானிய அடிப்படையில் உணவுப் பொருட்களை வழங்குமாறு தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
குறிப்பாக கோதுமை மா, அரிசி, சீனி, மண்ணெண்ணெய் போன்ற பொருட்களையாவது மானிய அடிப்படையில் வழங்க அரசாங்கம் முன்வர வேண்டுமென்று தொழிற்சங்கங்கள் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளன.
இது தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கையெடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைமை உருவாகும் என்றும் தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.