எம்.ஏ.எம்.நிலாம்
ஜே.வி.பி. இம்முறை மேதின ஊர்வலத்தை நடத்தாமல் பொதுக் கூட்டத்தை மட்டுமே நடத்தத் தீர்மானித்துள்ளது.
தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள், கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைமைகளை கருத்திலெடுத்து கட்சி இந்த முடிவை எடுத்திருப்பதாக ஜே.வி.பி. அறிவித்துள்ளது.
இதன்படி மேதினத்தன்று மாலை கொழும்பு மாநகர சபை மைதானத்தில் ஜே.வி.பி.யின் மே தினக் கூட்டம் நடைபெறவிருக்கின்றது. தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் ரில்வின் சில்வா, அநுர குமார திசாநாயக்கா, விஜித ஹேரத், கே.டி.லால் காந்த ஆகியோருடன் சர்வதேச தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சிலரும் உரையாற்றவிருக்கின்றனர்.