திருகோணமலை - கொழும்பு ரயில் பயணிகளுக்கான சேவைகளை அதிகரித்து, பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பஸ் போக்குவரத்துக்கான கட்டண உயர்வு, பாதுகாப்புக் கெடுபிடி என்பவற்றைக் கருத்திற்கொண்டு அதிகமான பயணிகள் ரயில் பயணத்தை நாடுவதனால் ரயில் பெட்டிகளில் இடநெருக்கடியும் அதேவேளை முடிச்சுமாறிகளின் தொல்லைகளும் அதிகரித்துள்ளன.
இந்த நிலைமைகளைக் கவனத்திற்கொண்டு, பொதுமக்களுக்கான போக்குவரத்து வசதிகளை அதிகரித்து, உறுதிப்படுத்தும் பொருட்டு, போதியளவு ரயில் பெட்டிகளை இணைப்பதோடு பாதுகாப்பையும் ஏற்படுத்துமாறு இந்த ரயில் பயணிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கோரியுள்ளனர்.