கிழக்கு மாகாண சபை தேர்தலை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எவ்வாறு கையாள வேண்டும், தற்போதைய பிரசார நிலை எவ்வாறு அமைந்துள்ளது என்பதுபற்றி ஆராயும் முகமாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நான்கு அமைச்சர்கள் திடீர் விஜயம் செய்து வேட்பாளர்களுடன் விஷேட சந்திப்பை மேற்கொண்டனர்.
கல்வி அமைச்சர் - சுசில் பிரேம் ஜயந்த, ஊடக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி, அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ ஆகியோரே வருகை தந்து ஆளும்கட்சி வேட்பாளர்கள் 10 பேரை சந்தித்து கலந்துரையாடினர்.
இச்சந்திப்பில் தேசத்தை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் கிழக்கு இணைப்பாளர் சந்திரா பெர்னாண்டோ, ஷ்ரீ சு.க.மட்டு. மாவட்ட பிரதம அமைப்பாளர் றவூப் ஏ மஜீட், மட்டு. பிரதிமேயரும் வேட்பாளருமான பிரதீப் மாஸ்டர் உள்ளிட்ட வேட்பாளர்களுடன் ஏனைய வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் வேட்பாளர்களான முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிள்ளையான் ஆகியோர் கலந்து கொள்ளாத போதும் அவர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.