எம்பிலிப்பிட்டிய அரச வைத்தியசாலைக்கு மேலதிகமாக மகப்பேற்று வைத்திய நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே பல வருடங்களாக இவ் வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்திய நிபுணர் ஒருவர் கடமையாற்றி வரும் நிலையில், பிரதேசத்தில் கணிசமான மக்கள் தொகையுடைய இவ் வைத்தியசாலைக்கு இன்னொரு வைத்திய நிபுணரின் சேவை அவசியமென பல தரப்பினாலும் வலியுறுத்தப்பட்டதையடுத்து இவ் வைத்தியர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, கடமையாற்றும் மகப்பேற்று வைத்தியர் இவ்வைத்தியசாலையில் கடந்த 6 மாதங்களில் 4,000 மகப்பேறுகளை நடத்தியுள்ளதாகவும் இது ஒரு சாதனையெனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.