அவிசாவளை ஈரியகொல்ல பகுதியில் நேற்றுத் திங்கட்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றுக் காலை 9 மணியளவில் மேற்படி பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றும் காரொன்றும் நேருக்கு நேர் மோதிய போதே இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இவர்களது மோட்டார் சைக்கிளும் இவர்களுடன் மோதிய காரும் சேதமடைந்துள்ளன.
விபத்தில் உயிரிழந்த இருவரது சடலங்களும் பின்னர் அவிசாவளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டன.