கல்பிட்டி ஆலங்குடா கடற்கரையோரத்திலிருந்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு மீனவர் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு கல்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
உயிரிழந்த மீனவர் நுரைச்சோலை இலந்தையடியைச் சேர்ந்த கட்டுபிட்டிகே அனுர சாந்த (வயது 45) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த வேளையில் கடலில் தவறி வீழ்ந்து இவர் உயிரிழந்திருக்கலாமென்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.