தலவாக்கலை பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக பல குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. அதேவேளை, சில இடங்களில் பனிக்கட்டி மழையும் பெய்ந்துள்ளது.
சுமார் ஒரு மணித்தியாலமாகத் தொடர்ந்து பெய்த மழை காரணமாக மரக்கிளைகள் முறிந்து விழ்ந்துள்ளதுடன், தலவாக்கலை பஸ் தரிப்பு நிலையத்திற்கருகில் உள்ள மின் மாற்றியும் சேதமடைந்துள்ளது.
கடும் காற்று காரணமாக பல வீடுகளின் கூரைகள் தூக்கி எறியப்பட்டு சுவர்கள் இடிந்து வீழ்ந்துள்ளன. குறிப்பிட்ட சில பகுதியில் மாத்திரமே இவ்வாறான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இதேவேளை, சில இடங்களில் பனிக்கட்டி மழை பெய்ததால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.