* படைத்தரப்பு தெரிவிப்பு
வடக்கே பல்வேறு களமுனைகளிலும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடும் மோதல்களில், ஐந்து படையினர் கொல்லப்பட்டும் 12 படையினர் படுகாயமடைந்துமுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த மோதல்களில் புலிகள் தரப்பில் 28 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிய வருவதாகவும் படைத்தரப்பு கூறியுள்ளது.
வவுனியா, மன்னார், மணலாறு மற்றும் யாழ். குடாநாட்டிலேயே ஞாயிற்றுக்கிழமை இந்தக் கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன.
வவுனியாவில் குறிசுட்டகுளம், பாலம்பிட்டி மற்றும் சின்னவெள்ளையன்குளம் பகுதியில் நடைபெற்ற மோதல்களில், 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் நான்கு படையினர் காயமடைந்துள்ளனர்.
மன்னாரில் காத்தான்குளம், அடம்பன் மற்றும் மல்லிகைத்திடல் பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் இராணுவச் சிப்பாயொருவர் கொல்லப்பட்டதுடன் 3 படையினர் காயமடைந்துள்ளனர்.
மணலாறில் ஜனகபுர, கொக்குத்தொடுவாய், கிரிப்பன்வெவ, ஆண்டான்குளம் மற்றும் குட்டான்குளம் பகுதியில் நடைபெற்ற மோதல்களில் இராணுவச் சிப்பாயொருவர் கொல்லப்பட்டதுடன் 3 படையினர் காயமடைந்துள்ளனர்.
யாழ். குடாவில் முகமாலைப் பகுதியில் நடைபெற்ற மோதலில் இராணுவச் சிப்பாயொருவர் கொல்லப்பட்டதுடன் இரு படையினர் காயமடைந்துள்ளனர்.
இந்த மோதல்களிலேயே விடுதலைப் புலிகள் தரப்பில் 28 பேர் வரை கொல்லப்பட்டதாகத் தெரிய வருவதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.