Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 22, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கருணாரட்ணம் அடிகள் படுகொலைக்கு விடுதலைப் புலிகள் கடும் கண்டனம்
[22 - April - 2008] [Font Size - A - A - A]
வடக்கு- கிழக்கு மனித உரிமை செயலகத்தின் இயக்குநரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளாரின் படுகொலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வடக்கு- கிழக்கு மனித உரிமை செயலகத்தின் இயக்குநரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளார் 20 ஏப்ரல் 2008 அன்று மாங்குளம்- மல்லாவி வீதியில் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரால் நடாத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

மாங்குளம் பகுதியில் உள்ள தேவாலயத்தில் இறை வழிபாட்டினை முடித்துக்கொண்டு கருணாரட்ணம் அடிகளார் தனது வெள்ளை நிற ஊர்தியில் திரும்பிக்கொண்டிருந்த வேளையில் நண்பகல் 12.30 மணியளவில் இவரது ஊர்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.

மக்களின் நலனுக்காகவும் மனித உரிமை நிலைமையினை மேம்படுத்துவதற்காகவும் எப்போதும் உழைத்து வந்த ஒரு செயற்பாட்டாளரை இலங்கை அரசாங்கம் வேண்டும் என்றே இலக்கு வைத்திருக்கிறது. மக்கள் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி அர்ப்பணிப்போடு செயற்பட்டு வந்த இத்தகையதொரு தொண்டனைக் கோரமாகக் கொலை செய்தமையின் ஊடாக மனித உரிமையினை மதித்துச் செயற்படுவதில் தான் எந்தளவிற்கு இழிநிலையில் இருக்கின்றது என்பதனை இலங்கை அரசாங்கம் மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கின்றது.

மனித உரிமைச் செயற்பாட்டாளர்களையும் தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் மனித உரிமை ஆர்வலர்களையும் இலக்கு வைத்துத் தாக்குதலை நடாத்தும் இலங்கை அரசினது செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மனித உரிமை மீறல்களில் தொடர்ந்தும் ஈடுபட்டுவரும் இலங்கை அராங்கத்தினது இத்தகைய போக்கினைச் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் சர்வதேச நாடுகளும் வன்மையாகக் கண்டிப்பதோடு இது போன்ற மோசமான மனித உரிமை மீறல்களில் அரசாங்கம் தொடர்ந்தும் ஈடுபடாமல் இருப்பதற்கு இலங்கை அரசிற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமென்றும் கோருகின்றோம்.

தனது இளம் வயது முதலே மக்கள் பணியில் ஈடுபட்டு வந்த கருணாரட்ணம் அடிகளாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
மின்விநியோக பரிமாற்றத்துக்கு இலங்கை, இந்தியா நடவடிக்கை
`அரிசி' கோரிக்கைக்கு இந்தியா காலை வாரிவிடும் அறிகுறி
கிழக்கில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிப்பு வன்முறைகளும் மோசமாக அதிகரிப்பு
கருணாரட்ணம் அடிகளின் படுகொலை மனித உரிமை ஆர்வலர்களை நசுக்கும் முயற்சி
இலங்கையின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் ஆட்சேபனை
எலிக்காய்ச்சலால் இதுவரை 41 பேர் மரணம்
கருணாரட்ணம் அடிகள் படுகொலைக்கு விடுதலைப் புலிகள் கடும் கண்டனம்
வடக்கில் பல இடங்களில் மோதல் 5 இராணுவம், 28 புலிகள் பலி
கிழக்கு மாகாண சபை தேர்தலில் 22,412 தபால் மூல வாக்குகள்
முல்லைத்தீவுக் கடலில் புலிகளின் படகுகள் மீது `கிபீர்' தாக்குதல்
இளம் குடும்பஸ்தரான முச்சக்கரவண்டி சாரதி வெள்ளை வானில் வந்தோரால் கடத்தப்பட்டார்
ஆட்டோ - பஸ் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் ஸ்தலத்தில் பலி; ஒருவர் படுகாயம்
தலவாக்கலையில் பனிக்கட்டி மழை வீடுகள் சேதம்; மரங்கள் முறிந்தன
யால காட்டில் காணாமல் போன மூவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்பு
நிராயுதபாணிகள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது மனித உயிருக்கான கேவல நிலையை காட்டுகிறது
தமிழக அகதி முகாம்களிலிருப்போருக்கு பிரஜாவுரிமை சான்றிதழ் வழங்க ஏற்பாடு
ஆலங்குடா கடற்கரையில் மீனவரின் சடலம் மீட்பு
மோட்டார் சைக்கிள் - கார் மோதி இருவர் பலி; அவிசாவளையில் சம்பவம்
6 மாதங்களில் 4 ஆயிரம் மகப்பேறுகள் மகப்பேற்று வைத்திய நிபுணரின் சாதனை
இடம்பெயர்ந்த ஆசிரியர்கள் தொடர்ந்தும் 4 மாதங்கள் சேவையாற்ற அனுமதி
பிரசார நடவடிக்கைகளை ஆராய 4 அமைச்சர்கள் கிழக்கிற்கு விஜயம்
பரீட்சை மோசடிக்கான தண்டனையை இரட்டிப்பாக்க திணைக்களம் நடவடிக்கை
பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ரயில் சேவையை அதிகரிக்க கோரிக்கை
விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லுக்கு அதிகூடிய உத்தரவாத விலையை அறிவிக்காதது ஏன்?
இம்முறை ஜே.வி.பி.யின் மேதின ஊர்வலம் இல்லை பொதுக் கூட்டத்தை மட்டுமே நடத்த முடிவு
மானிய அடிப்படையில் உணவுப் பொருட்களை வழங்குமாறு தொழிற்சங்கங்கள் கோரிக்கை
தேசிய மாநாட்டிலேயே கட்சிக்கான புதிய நியமனங்கள்; ஜே.வி.பி. தெரிவிப்பு
மௌலவி நியமனம் வழங்கி உலமாக்களை கௌரவித்த ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த வேண்டும்
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவை அதிகரிக்க கோரிக்கை
முகாமையாளரை இடமாற்றக் கோரி ஊட்டுவள்ளித் தோட்ட தொழிலாளர் வேலை நிறுத்தம்
மனித உரிமை மீறல் அதிகரிப்பின் எதிரொலி இலங்கைமீது தடைகளை விதிக்க வலியுறுத்தல்
சமய அறிவைப் பெறும் சமூகம் சீரும் சிறப்புமாக மிளிரும்
அல்லைப்பிட்டியிலிருந்து வெளியேறிய 350 குடும்பங்களில் ஒரு தொகுதி மக்கள் மீண்டும் சொந்த இடங்களுக்கு சென்றனர்
ஒப்பீட்டளவில் சமுர்த்தி நிறுவனம் மாத்திரமே யாழ் மக்களுக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருகின்றது
அரசில் மீண்டும் இணையுமாறு சிலர் வற்புறுத்தினாலும் ஐ.தே.க.வைவிட்டு நான் ஒரு போதும் செல்லமாட்டேன்
முன்பள்ளியின் அவசியத்தை புரிந்து கொள்ள முடியாத நிலையில் மலையகத்தில் 70 சதவீதமான பெற்றோர்கள்
இரத்தினபுரி மாவட்ட தமிழ்மொழி மூல பாடசாலைகளில் தளபாடம் பற்றாக்குறை
பெரும்பான்மை மக்கள் அனுபவிக்கும் உரிமைகள் பெருந்தோட்ட மக்களை சென்றடையவேண்டும்
அட்டன் கல்விப் பணிமனையில் தனிச் சிங்களத்தில் படிவங்கள்
கல்முனையில் முதலாவது பிரசாரக் கூட்டம்
மட்டு. மாவட்ட ஐ.ம.சு.மு.தேர்தல் இணைப்பாளராக றவூப் மஜீட் நியமனம்
கிழக்கில் சமாதானம் ஏற்பட்டுள்ளதாக நிரூபிக்க பேரினவாத அரசு வேடம் போடுகின்றது
அரசியல் அதிகாரத்தை வைத்திருப்போருக்கு எதிரான தளம் உருவாக்கப்படுவது அவசியம்
1988 இல் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் 17 ஆசனங்களை பெற்றது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com