ஜேர்மனி வூப்பெற்றால் நகரில் இடம்பெற்ற இலங்கைத் தமிழர்கள் ஏற்பாடு செய்த நாட்டுப்பற்றாளர்கள் நிகழ்வில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துவதையும் நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் இங்கு காணலாம்.
அரிசிக்கு உத்தரவாத விலையை அரசு பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து தலைநகர் கொழும்பிலும் வெளியூர்களிலும் அரிசிக்குப் பெருந்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்கா, லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் நேற்று திங்கட்கிழமை கொள்ளுப்பிட்டி சுப்பர் மார்க்கட் மற்றும் பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை போன்ற பகுதிகளில் நிலைமைகளை கண்டறியச் சென்ற போது மக்கள் சில்லறை வர்த்தக நிலையங்களை சூழ்ந்துகொண்டு அரிசிகேட்டு சத்தமிடுவதை இங்கு காண்கிறீர்கள்.