Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 22, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
பங்களாதேஷுடனான 5 ஆவது போட்டியிலும் வென்று தொடரை முழுமையாகக் கைப்பற்றியது பாகிஸ்தான்
[22 - April - 2008] [Font Size - A - A - A]
பாகிஸ்தான் வீரர் சல்மான் பட்டின் அதிரடி சதம் கைகொடுக்க ஐந்தாவது ஒருநாள் போட்டியில் 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் தோற்றது. இதன் முலம் 5 - 0 என ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை பாகிஸ்தான் வென்றது.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்த பங்களாதேஷ் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளில் பாகிஸ்தான் 4 - 0 என்று வென்று தொடரைக் கைப்பற்றிவிட்ட நிலையில், ஐந்தாவது போட்டி பகலிரவு ஆட்டமாக கராச்சியில் நடந்தது. நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடரை ஏற்கனவே இழந்துவிட்டதால் ஒரே ஒரு ஆறுதல் வெற்றியாவது பெறவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது பங்களாதேஷ் அணி.

தொடக்க வீரர்களாக ஆடிய சல்மான் பட் ஆரம்பம் முதலே அதிரடியாக தூள்கிளப்பினார். கம்ரன் அக்மல் (10) வந்த வேகத்தில் வெளியேறி ஏமாற்றினார்.

இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய யூனிஸ்கான், சல்மான்பட்டுடன் ஜோடி சேர்ந்து (69) அரைச்சதம் அடித்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இந்த ஜோடி 179 ஓட்டங்கள் குவித்தது.சல்மான் பட் (14 பவுண்டரி, 1 சிக்சர்) தனது ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஓட்டத்தை (136) பதிவுசெய்து ஆட்டமிழந்தார்.

இத்தொடரில் 23 வயது தொடக்க ஆட்டக்காரரான சல்மான் பட் வரிசையாக 33, 76, 132, 74 மற்றும் 136 என மொத்தம் 451 ஓட்டங்கள் குவித்து 2002 இல் சிம்பாவேவுக்கு எதிராக முகமது யூசுப்( 405) எடுத்த சாதனையை முறியடித்தார். யூசுப் (22), அப்ரிடி (4), கப்டன் சொய்ப் மாலிக் (27) அடுத்தடுத்து வெளியேற மிஸ்பா 22 பந்தில் 35 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்வரிசை வீரர்கள் சொதப்ப பாகிஸ்தான் இறுதியில் 9 விக்கெட் இழப்புக்கு 50 ஓவரில் 329 என்ற இமாலய இலக்கை எட்டியது.

பங்களாதேஷ் தொடக்க ஜோடியான தமீம் இக்பால் (9), சித்திக் (6) ஏமாற்றமளித்தனர். கப்டன் அஸ்ரபுல் (30) ஓட்டங்களுக்கு பெவிலியன் செல்ல, மக்மதுல்லா (37) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் சொல்லிக்கொள்ளும்படியாக எந்த வீரரும் ஓட்டம் எடுக்கவில்லை. அப்தூர் ரசாக் 5 பவுண்டரி அடித்து விறுவிறுப்பு தந்த வேகத்தில் 33 ஓட்டங்களுக்கு வெளியேறினார். முடிவில் 40.5 ஓவரில் 179 ஓட்டங்களுக்கு பங்களாதேஷ் ஆட்டமிழந்தது.

அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய ஆசிப் ஆட்டநாயகனாகவும் தொடர் நாயகனாக சல்மான் பட்டும் அறிவிக்கப்பட்டனர். 1990 நவம்பரில் நிகழ்த்தப்பட்ட தொடர்ச்சியான 10 வெற்றிகள் என்ற சாதனையை சொய்ப் மாலிக் கூட்டணி தகர்த்து 11 வெற்றிகளை பதிவுசெய்தது.

Email this page Your Opinion Print this page
ஒருநாள் போட்டித் தரவரிசை பட்டியலில் முதல் முறையாக முதல் 10 இடத்தில் முரளி இல்லை
2011 இல் இங்கிலாந்து அணியுடனான தொடரில் இந்தியா பங்கேற்கும்
ஒலிம்பிக் ஹொக்கி போட்டியில் பங்கேற்கும் அணிகள் உறுதியாகின
பங்களாதேஷுடனான ஒரு நாள் தொடர் பிரயோசனமற்றதென்கிறார் மியாண்டாட்
கங்குலியின் அணிக்கு மீண்டும் வெற்றி லக்ஷ்மனின் அணி தோல்வியைத் தழுவியது
டிராவிட்டின் பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸிடம் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட்டால் தோல்வி
பங்களாதேஷுடனான 5 ஆவது போட்டியிலும் வென்று தொடரை முழுமையாகக் கைப்பற்றியது பாகிஸ்தான்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com