"பலமற்ற பங்களாதேஷுடன் வீணாக ஆடிய தொடரை விட அவுஸ்திரேலியாவுடன் விளையாடியிருந்தால் உபயோகமாக இருந்திருக்கு"மென பாகிஸ்தான் முன்னாள் கப்டன் ஜாவிட் மியாண்டாட் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் பாதுகாப்புக் காரணங்களுக்காக அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை இரத்துச் செய்தது. அதன்பிறகு இந்தியா மற்றும் இலங்கையுடன் தொடரை நடத்த பாகிஸ்தான் முயற்சி எடுத்தது. இறுதியில் பங்களாதேஷ் அணியுடன் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரி ஆடி வருகிறது.
இது குறித்து பாகிஸ்தானின் மியாண்டாட் அளித்த பேட்டியில்;
"தொடரினால் ஒரு பயனும் கிடைக்கப் போவதில்லை. பாகிஸ்தான் அணி 5-0 என்று தொடரை வென்றாலும் பயன் பெறப் போவது எதிரணி தான். இதனால், சொந்த அணியின் பலமோ பலவீனமோ தெரிய வாய்ப்பில்லை. கம்ரான் அக்மல் இந்தப் போட்டிகளில் சோபிப்பது பெரிய விடயமல்ல" என்றார்.