Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 22, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
ஒலிம்பிக் ஹொக்கி போட்டியில் பங்கேற்கும் அணிகள் உறுதியாகின
[22 - April - 2008] [Font Size - A - A - A]
2008 பெய்ஜிங் ஒலிம்பிக் ஹொக்கி போட்டியில் பங்கேற்கும் அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

3 அணிகள் தகுதிப் போட்டிகள் மூலமாக தேர்வு செய்யப்பட்டன. கடைசியாக ஜப்பானில் நடந்த போட்டியில் ஜப்பானை 4 - 0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து வாய்ப்பை பெற்றது உலக சாம்பியன் ஜேர்மனி.

இது, போட்டியை நடத்தும் சீனா இடம்பெற்றுள்ள `ஏ' பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் விளையாடவுள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 12 அணிகள் விளையாடவுள்ளன. அவை, தலா 6 அணிகள் வீதம் `ஏ', `பி' என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் முறையில் போட்டிகள் நடைபெறும்.

`ஏ' பிரிவில் ஜேர்மனி, ஸ்பெயின், கொரியா, நியூசிலாந்து, பெல்ஜியம், சீனா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. `பி' பிரிவில் அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், பிரிட்டன், தென்ஆபிரிக்கா, கனடா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

கனடாவில் ஏப்ரல் 26 ஆம் திகதி முதல் நடைபெறும் கடைசி ஒலிம்பிக் தகுதிப் போட்டிக்குப் பின்னர் மகளிர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

சர்வதேச ஹொக்கி சம்மேளனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
ஒருநாள் போட்டித் தரவரிசை பட்டியலில் முதல் முறையாக முதல் 10 இடத்தில் முரளி இல்லை
2011 இல் இங்கிலாந்து அணியுடனான தொடரில் இந்தியா பங்கேற்கும்
ஒலிம்பிக் ஹொக்கி போட்டியில் பங்கேற்கும் அணிகள் உறுதியாகின
பங்களாதேஷுடனான ஒரு நாள் தொடர் பிரயோசனமற்றதென்கிறார் மியாண்டாட்
கங்குலியின் அணிக்கு மீண்டும் வெற்றி லக்ஷ்மனின் அணி தோல்வியைத் தழுவியது
டிராவிட்டின் பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸிடம் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட்டால் தோல்வி
பங்களாதேஷுடனான 5 ஆவது போட்டியிலும் வென்று தொடரை முழுமையாகக் கைப்பற்றியது பாகிஸ்தான்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com