Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 22, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
2011 இல் இங்கிலாந்து அணியுடனான தொடரில் இந்தியா பங்கேற்கும்
[22 - April - 2008] [Font Size - A - A - A]
இங்கிலாந்தில் 2011 ஆம் ஆண்டு நடக்கும் டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. இந்தத் தொடரில் 4 டெஸ்ட் போட்டிகள் நடக்கவுள்ளன.

இதுகுறித்து, இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் முதன்மை நிர்வாகி டேவிட் காலியர் லண்டனில் நேற்று முன்தினம் கூறியதாவது;

இந்தியக் கிரிக்கெட் அணி 2011 ஆம் ஆண்டு இங்கிலாந்து வருவதை உறுதி செய்துள்ளது. இந்திய அணி 4 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி ஒன்றிலும் விளையாடுகிறது.

டெஸ்ட் போட்டிகளை லோர்ட்ஸ், டிரென்ட்பிரிட்ஜ், எட்பாஸ்டன், ஓவல் மைதானங்களில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். விரைவில் இறுதி முடிவெடுக்கப்படும். ஒருநாள் போட்டிகள் கார்டிப், துர்ஹாம், லோர்ட்ஸ், ஓவல் உள்ளிட்ட மைதானங்களில் நடத்தப்படும். 20 ஓவர் போட்டிக்கான இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா செல்லும் இங்கிலாந்து அணி, 2 டெஸ்ட் மற்றும் 7 ஒருநாள் போட்டியில் விளையாடுவதாகவும் டேவிட் கூறினார்.

இங்கிலாந்துக்கு கடைசியாக 2007 ஆம் ஆண்டு சென்ற இந்திய அணி 1-0 என்று டெஸ்ட் தொடரை வென்றது. எனினும், 4-3 என்று இங்கிலாந்து ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.

Email this page Your Opinion Print this page
ஒருநாள் போட்டித் தரவரிசை பட்டியலில் முதல் முறையாக முதல் 10 இடத்தில் முரளி இல்லை
2011 இல் இங்கிலாந்து அணியுடனான தொடரில் இந்தியா பங்கேற்கும்
ஒலிம்பிக் ஹொக்கி போட்டியில் பங்கேற்கும் அணிகள் உறுதியாகின
பங்களாதேஷுடனான ஒரு நாள் தொடர் பிரயோசனமற்றதென்கிறார் மியாண்டாட்
கங்குலியின் அணிக்கு மீண்டும் வெற்றி லக்ஷ்மனின் அணி தோல்வியைத் தழுவியது
டிராவிட்டின் பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸிடம் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட்டால் தோல்வி
பங்களாதேஷுடனான 5 ஆவது போட்டியிலும் வென்று தொடரை முழுமையாகக் கைப்பற்றியது பாகிஸ்தான்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com