சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில் இலங்கையின் முரளிதரன் 10 ஆவது இடத்திற்கு வெளியே தள்ளப்பட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் அவர், முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறாமல் போவது இதுவே முதல் முறையாகும்.
மேற்கிந்தியாவுடனான ஒருநாள் போட்டித் தொடரில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியது. இத்தொடரில் முரளிதரன் அணியில் இ டம்பெறவில்லை. தற்போதைய ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் நியூஸிலாந்தின் டானியல் வெற்ரோரி முதலிடம் பிடித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளுக்கான ஐ.சி.சி. தரவரிசையில் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் 2 ஆவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்தப் பட்டியலில் தென்னாபிரிக்காவின் கிரேம் ஸ்மித் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். அவுஸ்திரேலிய கப்டன் ரிக்கிபொண்டிங் 3 ஆவது இடத்தில் உள்ளார். இந்தியாவின் தோனி 10 ஆவது இடத்திலிருக்கிறார்.
அணிகளுக்கான தரவரிசையில் தென்னாபிரிக்கா முதல் இடத்திலும் அவுஸ்திரேலியா 2 ஆவது இடத்திலும் உள்ளன. நியூஸிலாந்து 3 ஆவது இடத்திலும் இந்தியா 4 ஆவது இடத்திலும் உள்ளன.
சமீபத்தில் பங்களாதேஷுக்கு எதிராக 5 போட்டிகளிலும் வெற்றி பெற்ற பாகிஸ்தான், இந்தியாவை நெருங்கியுள்ளது.