Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
ஏகத்துவ திருக்கோவில்
[23 - April - 2008] [Font Size - A - A - A]
பி.பரமேஸ்வரன்

மனிதனை முழுமையாக எந்த நிபந்தனையும் இல்லாமல் விடுவிப்பதற்காக நிர்மாணிக்கப்பட்டது தான் ஏகத்துவ திருக்கோவில். பல யுகங்களாக மனதின் பிடியில் சிக்கித் தவிக்கும் மனிதனை அதன் பிடியிலிருந்து விடுத்து அந்த மனதை அவன் அடிமைகொள்ள உதவுவதற்காகவே உருவாக்கப்பட்டது இத்திருக்கோவில்.

சென்னை, கல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காடாவிலிருந்து ஸ்ரீகாளநாஸ்தி செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் பின்னணியோடு உயர்ந்து நிற்கும் ஒரு பிரமாண்டமான நவீன கட்டமைப்பே ஏகத்துவ திருக்கோவில். இக்கோயிலுக்கு வரும் ஒவ்வொரு பக்தருக்கும் அவரது சொந்தக் கடவுளுடன் தொடர்பு ஏற்படும். மனிதனின் ஆசைகளும் இறைவனின் ஆசியும் சங்கமிக்கும் இடமே இத்திருக்கோவில்.

புராதன இந்திய பகுத்தறிவாளர் வாழ்க்கையின் தேவையை நான்கு வித புருஷார்த்தங்களாக வகுந்துள்ளார்கள். அவையாவன, அர்த்தா (செல்வம் சேர்த்தல்) நாமா (ஆசைகளை நிறைவேற்றல்) தர்மா (உள் வளர்ச்சி) மோக்ஷா அல்லது முக்தி ( ஒருமை நிலைக்கு விழித்தெழுதல்).

அம்மா பகவானின் குறிக்கோள், அர்த்தா நாமாவின் நிறைவைச் சூழ்ந்துள்ளது. அதன் பயன் இயற்கையான இதய மலர்ச்சி (தர்மா) ஏற்பட்டு இறுதியாக ஏகத்துவ நிலை (ஐக்கிய நிலை)க்கு இட்டுச் செல்ல முழுமையான நிபந்தனையற்ற விடுதலையை மனிதனுக்கு அளிப்பதுதான் அம்மா பகவான் கொண்ட பெருவிருப்பம். அதன் விளைவு தான் உன்னத ஏகத்துவ ஆலயத்தின் தோற்றம்.

எண்ணமற்ற புனித பாரம்பரிய கொள்கையின் படி விஷேடமாக திட்டமிட்டு அமைக்கப்பட்ட ஏகத்துவ ஆலயம், வாழ்க்கையின் முக்கிய நான்கு நோக்கங்களையும் நிறைவேற்றிப் பலப்படுத்தி நிற்கிறது. புதிய பார்வையோடு புதிய வாழ்க்கையும் உலகத்தையும் பார்க்கின்ற மனித சமுதாயத்தை உருவாக்குகின்றது. மனித அவாவும் தெய்வத் தலையீடுகளும் ஒன்று சேர்ந்து பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த மனித தேடலுக்கான பதிலைக்காண வைத்தது.

காலம் காலமாக பூஜிக்கப்பட்டு வரும் சூரிய யந்திரத்தின் முப்பரிமாண அமைப்பே இத்திருக்கோயில். இந்த ஆலயத்திலுள் மனிதன் நுழைந்தாலே அவனுள் ஒரு பரிமாண மாற்றம் ஏற்படும். அவன் உடலினுள்ள சூட்சுமமான 7 சக்கரங்களும் சரியாகக் இயங்கத் தொடங்கி அவனது இறைசக்தியை (குண்டலினி) ஊக்குவிக்கும். இங்கு வருபவரின் ஆரோக்கியம், பொருளாதாரம் மற்றும் உறவு முறையில் ஏற்படும் பிரச்சினைகள் தீரும். மனித வாழ்வின் முக்கிய புருஷார்த்தங்கள் ஆன மேலே கூறப்பட்ட அர்த்தா, நாமா, தர்மா மற்றும் மோக்ஷா (முக்தி) ஆகிய நான்கும் நிறைவடைய இக்கோவிலில் அருள் கிடைக்கும். மனிதனுக்கு பரிபூரணமான அமைதியை தரவல்ல ஜீவன் முக்தியையும் காரணமற்ற அன்பையும் எல்லையில்லா ஆனந்தத்தையும் இக்கோவில் அளிக்கும்.

இந்த ஏகத்துவ ஆலயக் கட்டிடத் தொகுதிகள் தகுந்த வாஸ்து விகிதப்படித் திட்டமிட்டுக் கட்டப்பட்டுள்ளது. 50 மீற்றர் இடைவெளியில் அமைந்த 3 மீற்றர் அகலமும் 3 மீற்றர் ஆழமும் கொண்ட பெட்டி வடிவிலான அழுத்தமான 8 ஒன்றுக்கொன்று குறுக்காகச் செல்லும் உத்தரங்களால் கட்டிடத்தின் முழுக் கூரையமைப்பினைத் தாங்கக் கூடியதாகக் கட்டப்பட்டது. இது ஒரு பொறியியல் வித்தையாகும். ஆசிய கண்டத்திலேயே தூண்கள் ஏதும் இல்லாமல் 8000 பேர் உட்கார்ந்து தியானம் செய்யும் வகையில் நிர்மாணிக்கப்பட்ட ஒரு கூடத்தைத் தன்னுள் கொண்டது இக்கோவில்.

ஏகத்துவ ஆலயக் கட்டிடத் தொகுதி அடித்தளத்திலும் நடுத்தளத்திலும் காத்திருக்கும் மண்டபத்தையும் மேல்தளத்தில் தியானமண்டபத்தையும் கொண்டதாக மூன்று தளங்கள் அமைந்துள்ளன. தியான மண்டபம் 2500m2 பரப்ளவைக் கொண்டதாகவும் கீழ் மண்டபங்கள் 6700m2 பரப்பளவு கொண்டதாகவும் உள்ளன. கீழ்த் தளத்திலிருந்து தியான மண்டபத்தின் உயரம் 12.35 m . தியான மண்டபத்திலிருந்து பிரதான கோபுரத்தின் அடித்தள உயரம் 10.72 m மத்திய கோபுரத்தின் உயரம் 9. 8 m ஏகத்துவ ஆலயத்தின் மொத்த உயரம் 32.85 m ஆகும்.

முழு ஆலயத் கட்டிடத் தொகுதி 130mது 106 m அளவிளான மேடையின் மீது நடப்பட்டுள்ளது. அது நீர் நிறைந்து அகழியாலும் நான்கு மூலைகளிலும் பெரிய நீர் நிலைகளாலும் சூழப்பட்டுள்ளது. பிரதான படிக்கட்டு பாதையில் நீரூற்றுகள் அமைக்கப்பட்டு, அவை முழு வளிமண்டலத்தையும் எதிர்மறை அயன்களால் மாற்றி பின்பு மனித உடலுக்கு சக்தியை வழங்குகிறது. முக்கியமான திசைகளில் நுழை வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. எந்தத் திசையில் இருந்து பார்த்தாலும் ஒரே மாதிரித் தோற்றம் அளிக்கும் வகையில் மிகவும் நுட்பமாகத் திட்டமிட்டு இந்த அதி அற்புத ஏகத்துவ ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோயிலின் புனித சுற்றாடல், தெய்வ அருள் நிறைந்த தங்கப்பந்தின் இறக்கத்தை அதிகரித்து சக்தி மாற்றத்தை பெருக்கி ஏகத்துவ தீட்சையின் அற்புத நிகழ்வை பலமடங்கு அதிகரிக்கச் செய்கிறது. வெள்ளமெனக் பெருகும் இம் மாபெரும் அற்புதங்கள் உடல் உள ஆன்மீக நிவாரணம் அளிக்கிறது. வாழ்க்கையில். எல்லாத் துறைகளிலும் தேவையான செல்வம் , வெற்றி, ஞானம், இதய மலர்ச்சி என்பவற்றை விழித்தெழச் செய்கிறது. மனிதனை மையங் கொண்ட துன்பங்களை விலக்குகிறது. கொடையாலும் சேவையாலும் ஏற்படுகின்ற காரணமற்ற மகிழ்ச்சியை கொடுக்கிறது. ஐக்கிய நிலைக்கு விழித்தெழச் செய்து கடவுளை உணர வைக்கிறது.

மனிதனை முழுமையான நிபந்தனையற்ற விடுதலை அளித்து பரிபூரண முக்திநிலை அடைவதற்கு அர்ப்பணிக்கும் உயர்ந்த ஸ்தானம் கொண்டது. ஏகத்துவ ஆலயம் மட்டுமே. கட்டிடக்கலை விந்தையை வெளிப்படுத்தும் தூண்களற்ற 22500 சதுர அடி கொண்ட மண்டபமே அதன் மேன்மைக்குச் சான்று. இது நவீன கால அதிசயம் என்பது உண்மை. ஏகத்துவ திருக்கோவிலின் திறப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Email this page Your Opinion Print this page
ஜே.வி.பி. கொள்கையில் மாற்றம் ஏற்படுமா?
ஏகத்துவ திருக்கோவில்
மொழிகளுக்கு சமமான மதிப்பும் வளமும் வழங்கவேண்டும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com