Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை உலகிற்கு வெளிப்படுத்தியவர் கருணாரட்ணம் அடிகள்
[23 - April - 2008] [Font Size - A - A - A]
*அனுதாப செய்தியில் ஈழவேந்தன் தெரிவிப்பு

வடக்கு, கிழக்கில் அரசு மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்களை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்துவதில் முன்னின்று செயற்பட்ட கருணாரட்ணம் அடிகளாரின் படுகொலை தமிழ் மக்களை பேரதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் தெரிவித்துள்ளார்.

கருணாரட்ணம் அடிகளாரின் படுகொலை தொடர்பாக ஈழவேந்தன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கி.சிவநேசன் மறைந்த 45 ஆம் நாளில் சிவநேசனுக்கு ஏற்பட்ட கதி இவருக்கும் ஏற்பட்டிருப்பது எம்மை கதிகலங்கச் செய்துள்ளது.

அரசியல்வாதியாகவிருப்பதும் சரி ஆத்மீகவாதியாகவிருப்பதும் சரி தமிழர் உரிமைக்காக குரல் எழுப்பின் அரசபயங்கரவாதத்திற்கு பலியாவதுதான் அவர்கள் நிலையாகியுள்ளது.

கருணாரட்ணம் அடிகளாரின் மனித உரிமைக்கான குரல் 2004 ஆம் ஆண்டு ஜெனிவாவில் ஒலித்தது. அண்மையில் நோர்வேயில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் இலங்கையின் வடகிழக்கில் ஏற்பட்டுள்ள மனித அழிவுகளைப்பற்றியும், அம்மண்ணின் அழிவுபற்றியும் அருட்திரு கருணாரட்டிணம் அடிகளார் வழங்கிய குறிப்புக்களின் அடிப்படையில் வைகோவின் உரை அமைந்திருந்தது. தாம் ஏன் சாகிறோம், நாம் ஏன் சாகடிக்கப்படுகிறோம் என்பதை விளக்கும் முறையில் அகிலம் எங்கும் எம் அழுகுரல் கேட்க வேண்டும் என்பது அடிகளாரின் குறிக்கோள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் பெரும் விபத்தில் சிக்கி உயிர் தப்ப முடியுமோ என்ற நிலையில் யாழ்ப்பாண மருத்துவமனையில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து வைத்தியம் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியிருந்தார். மனமுருகி வைத்தியர்கள் இவருக்கு துணைநின்ற போதும். நாம் அனைவரும் இறைஞ்சியதன் விளைவாக இறைவன் காட்டிய இரக்கமே இவரது உயிரைக் காத்தது. பெரும் விபத்தில் தப்பிய இவர் கிளைமோர் தாக்குதலுக்கு பலியானது நம் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

கருணாரட்ணம் அடிகள் ஆற்றிய ஈடு இணையற்ற பணியை தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் நன்றி உணர்வுடன் நினைவு கூருவது உறுதி.

Email this page Your Opinion Print this page
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடமிருந்து வெளிப்படையான தீர்வை எதிர்பார்க்க முடியாது
தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்களுடன் அமெரிக்க உயரதிகாரி திடீர் சந்திப்பு
கொழும்பில் அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு வெளியிடங்களிலிருந்து லொறிகள் வரவில்லை
கருணாரட்ணம் அடிகள் படுகொலைக்கு நோர்வே அரசு கடும் கண்டனம்
மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகத்திடம் எடுத்துச்செல்வதில் பெரும் பங்களிப்பு வழங்கியவர்
முகமாலையில் கவசப்படையணி முன்னேற முயற்சி முறியடித்ததாக விடுதலைப் புலிகள் தெரிவிப்பு
ஆனைவிழுந்தான் பகுதியில் கிளைமோர் தாக்குதல் பூநகரி ப.நோ.கூ.ச. பணியாளர் இருவர் காயம்
இராணுவத்திலிருந்து தப்பியோடியோருக்கு அரசாங்கம் மீண்டும் பொதுமன்னிப்பு
ஈரான் ஜனாதிபதியின் தெற்காசிய விஜயம் அமெரிக்கா முன்வைக்கும் `நிபந்தனைகள்'
நிதி உதவிக்காக ஈரான், சீனா பக்கம் கவனத்தை திருப்பியுள்ள இலங்கை
அரசின் மனித உரிமை மீறல்கள் உலகிற்கு தெரியவருவதை தடுக்கவே கருணாரட்ணம் அடிகள் கொல்லப்பட்டார்
முல்லைத்தீவில் விமானத் தாக்குதலில் இளைஞன் பலி; 2 சிறுமிகள் உட்பட 8 பேர் காயம்
மனைவியை பிரிந்து வாழும் மனநோயாளியை காணவில்லை ; சகோதரி பிரதியமைச்சரிடம் புகார்
வங்கி ஊழியர் சங்கம், வர்த்தக ஊழியர் சங்கத்துடன் இணைந்து ஐ.தொ. சம்மேளனத்தின் மே தின நிகழ்வுகள்
வர்த்தகர் வீட்டில் கைக்குண்டு மீட்பு
கருணாரட்ணம் அடிகளாரின் படுகொலைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடும் கண்டனம்
தேயிலை கொழுந்துகளை பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி மயங்கி விழுந்து மரணம்
கிழக்கில் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணி இன்று ஆரம்பம்
கடத்தப்பட்ட இருவர் குறித்து நடவடிக்கையெடுக்குமாறு உத்தரவு
இராணுவ வீரர் கத்திக் குத்துக்கு பலி
ஆயுதங்கள் சகிதம் ஐந்து கொள்ளையர் செட்டிகுளத்தில் பொலிஸாரால் கைது
பட்டவத்தை ஆட்டோ விபத்தில் ஒருவர் பலி, ஐவர் படுகாயம்
தமிழ் பேசும் சமூகத்தின் ஒற்றுமைக்காக அர்ப்பணித்திருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றியடைவது நிச்சயம்
தரமான தேயிலையை உற்பத்தி செய்யாத தொழிற்சாலைகளின் அனுமதி ரத்து செய்யப்படும்
பிரிட்டிஷ் பிரஜை கடலில் மூழ்கி மரணம்
"எமது சமூக அமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால் மூத்தோர் பராமரிப்பு பாரிய சுமையாக மாறி வருகின்றது"
அரிசி விலைப் பட்டியல் காட்சிப்படுத்தப்படாமையினால் பாவனையாளர்களுக்கு பெரும் இடையூறு
நாடுபூராவும் ஜனநாயக சூழலை உருவாக்கும் நடவடிக்கையையே ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்
வழிகாட்டல் முறையாக முன்னெடுக்கப்படுமாயின் ஒவ்வொரு குடும்பமும் சமாதானத்தை அனுபவிக்க முடியும்
22 வருடங்கள் நரிகளாக இருப்பதை விட 2 ஆண்டுகள் சிங்கமாக இருக்க விரும்புகிறேன்
வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலமே முஸ்லிம் முதலமைச்சரை பெற்றுக் கொள்ள முடியும்
வங்குரோத்தான அரசியல் கட்சிகளை நம்பி ஏமாறாமல் ஐ.ம.சு. முன்னணியையே மக்கள் ஆதரிக்க வேண்டும்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எந்த இனம் வெற்றி பெற்றாலும் மற்ற இனத்தின் உதவியுடனேயே ஆட்சியமைக்க முடியும்
தமது மண்ணை பேரினவாதிகளின் கெடுபிடிகளிலிருந்து மீட்பதற்காக தமிழ் மக்களும் இம்முறை ஐ.தே.க.வுக்கே வாக்களிக்க முடிவு
சக இன மக்களின் நிலங்களை சுவீகரிப்பது கூட்டான ஆட்சிமுறைக்கு விரோதமானது
இம்முறை மேதின ஒன்றுகூடல்கள் எவையுமில்லை
கல்விமாணி கற்கைநெறி பரீட்சை நேர சூசியில் ஏற்பட்ட மாற்றத்தினால் மாணவர் பாதிப்பு
அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை உலகிற்கு வெளிப்படுத்தியவர் கருணாரட்ணம் அடிகள்
படுகொலை செய்யப்பட்டோரின் உடல்களை காகங்கள் குதறிய வண்ணம் இருந்ததை கண்டேன்
சாய்ந்தமருது நெடுஞ்சாலை புனரமைப்பு பணியை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com