யாழ்ப்பாணத்தில் இம் முறை அரசியல் கட்சிகளோ, தொழிற்சங்கங்களின் கூட்டு அமைப்புகளோ மேதின கூட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் எதனையும் செய்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் இலங்கைவங்கி ஊழியர் சங்க யாழ். மாவட்ட கிளையினரும் புதிய ஜனநாயகக் கட்சியினரும் சிறியளவிலான கலந்துரையாடல் நடத்த ஏற்பாடுகளை செய்துவருவதாக அறிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும், அவர்களோடு இணைந்த மொழிவாரி தமிழ் தொழிற்சங்கக் கூட்டமைப்பும் பரந்தளவில் மேதின ஊர்வலங்களை நடத்திவந்தமை குறிப்பிடத்தக்கது.
மேதின நிகழ்வுகளை நடாத்த அனுமதிவழங்கப்படுமென யாழ்ப்பாணப் பொலிஸார் அறிவித்துள்ள போதும், அனுமதிகோரி எந்தவொரு அரசியல் கட்சியோ, தொழிற்சங்க அமைப்புகளோ விண்ணப்பம் செய்ய வில்லையென யாழ். பிராந்திய உதவிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.