Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
வங்குரோத்தான அரசியல் கட்சிகளை நம்பி ஏமாறாமல் ஐ.ம.சு. முன்னணியையே மக்கள் ஆதரிக்க வேண்டும்
[23 - April - 2008] [Font Size - A - A - A]
*ஜனநாயகக் கட்சி பொதுச் செயலாளர் சல்மா ஹம்ஸா

வங்குரோத்தான அரசியல் கட்சிகளை நம்பி ஏமாந்துவிடாமல், சகல இன மக்களுக்கும் நன்மைகளைச் செய்துவரும் அரசாங்கத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை மக்கள் ஆதரிக்க வேண்டும்.

இவ்வாறு இலங்கை ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் சல்மா ஹம்ஸா தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கத்தின் வெற்றிலைச் சின்னத்தினை ஆதரித்தும், முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினதும் வெற்றியினை உறுதிப்படுத்து முகமாகவும் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேற்படி, கூட்டம் பெருந்திரளான மக்கள் முன்னிலையில் காத்தான்குடி குட்வின் சந்தியில் இடம்பெற்றது.

சல்மா ஹம்ஸா தனதுரையில் மேலும் குறிப்பிடுகையில்; ஐக்கிய தேசியக் கட்சி நீண்டகாலமாகவே அதன் வலிமையினை இழந்து அரசியல் வங்குரோத்து நிலையினை அடைந்துள்ளது.

மக்கள் ஆதரவு கிஞ்சித்தும் இல்லாத காரணத்தினாலேயே அக்கட்சி அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சிலபிரதேசங்களில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் போட்டியிடவில்லை என்பது உலகறிந்த விடயமாகும். ஆனால், மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம் நாடளாவிய ரீதியில் பெரும் செல்வாக்கினைப் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் மக்களின் பேரபிமானம் கொண்டுள்ள கட்சியாகும்.

இக்கட்சியின் தொடர் தேர்ச்சியான வெற்றிகள் மக்கள் அரசாங்கத்தின் பக்கம் நின்று ஜனாதிபதியினது மகிந்த சிந்தனையின் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு நல்ல ஆதரவினை வழங்கி வருகின்றனர் என்பதையே காட்டி நிற்கின்றன.

அரசாங்கத்தின் மூலம் அகில இலங்கை ரீதியில் ஆயிரக் கணக்கான கிராமங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன. காலம் காலமாக இருளில் மூழ்கிக் கிடந்த கிராமங்கள் மின்னொளியைப் பெற்றுள்ளன.

தொழில் வாய்ப்புகள், பொருளாதார மேம்பாடு, விவசாயத் துறையின் வளர்ச்சி, கல்வித்துறையின் முன்னேற்றம் என பல்வேறு துறைகளிலும் நாடு அபிவிருத்தி கண்டு வருகிறது. நமது பிரதேச மக்கள் தொடர்ந்தும் அரசுக்கு தமது ஆதரவினை வழங்குவதன் மூலம் எமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடிவதுடன், ஜனாதிபதியின் விருப்பத்தினைப் பெற்ற மக்களாகவும் நாம் ஆக முடியும்.

கிராமங்களின் முன்னேற்றத்திற்கு ஜனநாயக ரீதியில் நடைபெறும் தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளும் பெரும் பங்களிப்பினைச் செய்கின்றனர். இதில் பிராந்திய ரீதியில் நடைபெறும் தேர்தல்களும் கணிசமான முக்கியத்துவத்தினைக் கொண்டுள்ளன. மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கத்தின் சார்பிலான பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படின் நமது கிழக்கு மாகாணம் மேலும் அபிவிருத்தியில் செழிப்பதற்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து செல்வதற்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இப்பிரதேசத்தின் படித்த இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்வதற்கும் நல்ல சந்தர்ப்பங்கள் கிட்டும்.

எனவே, இப்பகுதி மக்கள் தமக்குக் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பினைத் தவறவிட்டுவிடாமல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிப்பதுடன், மக்கள் பணிக்காக தம்மை நீண்டகாலம் அரசியலில் இணைத்துக்கொண்டு பாடுபட்டு வரும் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினதும் வெற்றியையும் உறுதிசெய்து தமக்கான நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

Email this page Your Opinion Print this page
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடமிருந்து வெளிப்படையான தீர்வை எதிர்பார்க்க முடியாது
தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்களுடன் அமெரிக்க உயரதிகாரி திடீர் சந்திப்பு
கொழும்பில் அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு வெளியிடங்களிலிருந்து லொறிகள் வரவில்லை
கருணாரட்ணம் அடிகள் படுகொலைக்கு நோர்வே அரசு கடும் கண்டனம்
மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகத்திடம் எடுத்துச்செல்வதில் பெரும் பங்களிப்பு வழங்கியவர்
முகமாலையில் கவசப்படையணி முன்னேற முயற்சி முறியடித்ததாக விடுதலைப் புலிகள் தெரிவிப்பு
ஆனைவிழுந்தான் பகுதியில் கிளைமோர் தாக்குதல் பூநகரி ப.நோ.கூ.ச. பணியாளர் இருவர் காயம்
இராணுவத்திலிருந்து தப்பியோடியோருக்கு அரசாங்கம் மீண்டும் பொதுமன்னிப்பு
ஈரான் ஜனாதிபதியின் தெற்காசிய விஜயம் அமெரிக்கா முன்வைக்கும் `நிபந்தனைகள்'
நிதி உதவிக்காக ஈரான், சீனா பக்கம் கவனத்தை திருப்பியுள்ள இலங்கை
அரசின் மனித உரிமை மீறல்கள் உலகிற்கு தெரியவருவதை தடுக்கவே கருணாரட்ணம் அடிகள் கொல்லப்பட்டார்
முல்லைத்தீவில் விமானத் தாக்குதலில் இளைஞன் பலி; 2 சிறுமிகள் உட்பட 8 பேர் காயம்
மனைவியை பிரிந்து வாழும் மனநோயாளியை காணவில்லை ; சகோதரி பிரதியமைச்சரிடம் புகார்
வங்கி ஊழியர் சங்கம், வர்த்தக ஊழியர் சங்கத்துடன் இணைந்து ஐ.தொ. சம்மேளனத்தின் மே தின நிகழ்வுகள்
வர்த்தகர் வீட்டில் கைக்குண்டு மீட்பு
கருணாரட்ணம் அடிகளாரின் படுகொலைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடும் கண்டனம்
தேயிலை கொழுந்துகளை பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி மயங்கி விழுந்து மரணம்
கிழக்கில் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணி இன்று ஆரம்பம்
கடத்தப்பட்ட இருவர் குறித்து நடவடிக்கையெடுக்குமாறு உத்தரவு
இராணுவ வீரர் கத்திக் குத்துக்கு பலி
ஆயுதங்கள் சகிதம் ஐந்து கொள்ளையர் செட்டிகுளத்தில் பொலிஸாரால் கைது
பட்டவத்தை ஆட்டோ விபத்தில் ஒருவர் பலி, ஐவர் படுகாயம்
தமிழ் பேசும் சமூகத்தின் ஒற்றுமைக்காக அர்ப்பணித்திருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றியடைவது நிச்சயம்
தரமான தேயிலையை உற்பத்தி செய்யாத தொழிற்சாலைகளின் அனுமதி ரத்து செய்யப்படும்
பிரிட்டிஷ் பிரஜை கடலில் மூழ்கி மரணம்
"எமது சமூக அமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால் மூத்தோர் பராமரிப்பு பாரிய சுமையாக மாறி வருகின்றது"
அரிசி விலைப் பட்டியல் காட்சிப்படுத்தப்படாமையினால் பாவனையாளர்களுக்கு பெரும் இடையூறு
நாடுபூராவும் ஜனநாயக சூழலை உருவாக்கும் நடவடிக்கையையே ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்
வழிகாட்டல் முறையாக முன்னெடுக்கப்படுமாயின் ஒவ்வொரு குடும்பமும் சமாதானத்தை அனுபவிக்க முடியும்
22 வருடங்கள் நரிகளாக இருப்பதை விட 2 ஆண்டுகள் சிங்கமாக இருக்க விரும்புகிறேன்
வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலமே முஸ்லிம் முதலமைச்சரை பெற்றுக் கொள்ள முடியும்
வங்குரோத்தான அரசியல் கட்சிகளை நம்பி ஏமாறாமல் ஐ.ம.சு. முன்னணியையே மக்கள் ஆதரிக்க வேண்டும்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எந்த இனம் வெற்றி பெற்றாலும் மற்ற இனத்தின் உதவியுடனேயே ஆட்சியமைக்க முடியும்
தமது மண்ணை பேரினவாதிகளின் கெடுபிடிகளிலிருந்து மீட்பதற்காக தமிழ் மக்களும் இம்முறை ஐ.தே.க.வுக்கே வாக்களிக்க முடிவு
சக இன மக்களின் நிலங்களை சுவீகரிப்பது கூட்டான ஆட்சிமுறைக்கு விரோதமானது
இம்முறை மேதின ஒன்றுகூடல்கள் எவையுமில்லை
கல்விமாணி கற்கைநெறி பரீட்சை நேர சூசியில் ஏற்பட்ட மாற்றத்தினால் மாணவர் பாதிப்பு
அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை உலகிற்கு வெளிப்படுத்தியவர் கருணாரட்ணம் அடிகள்
படுகொலை செய்யப்பட்டோரின் உடல்களை காகங்கள் குதறிய வண்ணம் இருந்ததை கண்டேன்
சாய்ந்தமருது நெடுஞ்சாலை புனரமைப்பு பணியை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com