Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
22 வருடங்கள் நரிகளாக இருப்பதை விட 2 ஆண்டுகள் சிங்கமாக இருக்க விரும்புகிறேன்
[23 - April - 2008] [Font Size - A - A - A]
*பாராட்டு விழாவில் பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவிப்பு

"இருபத்தியிரண்டு வருடங்கள் நரிகளாக இருந்துகொண்டு தந்திரங்களை மேற்கொள்வதை விடுத்து, இரு வருடங்கள் சிங்கமாக இருந்து வீரத்துடன் செயல்பட்டு சமூகப் பணியாற்றுவதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன். அத்துடன், நான் சார்ந்த சமூகத்தைப் பாதுகாக்கும், பாரிய பணியிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றேன்".

இவ்வாறு, பிரதி சுகாதார அமைச்சரும், பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் அப்புத்தளை, இந்து கலாசார மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

ஜப்பானிய பல்கலைக்கழகத்தினால் பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஸின் சேவை நலனைப் பாராட்டி அவருக்கு வழங்கப்பட்ட "கலாநிதி" பட்டத்தையடுத்து அவரை கௌரவிக்கும் வகையில் அப்புத்தளை இந்து கலாசார மண்டபத்தில் பாராட்டுவிழா வெகு விமரிசையாக இடம்பெற்றது. அப்புத்தளை வர்த்தக சமூகத்தினர், சைவ இளைஞர் மன்றத்தினர், மக்கள் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள், அப்புத்தளை வாழ் தமிழ் மக்கள் ஆகியோர் இணைந்து மேற்படி விழாவினை ஏற்பாடு செய்திருந்தனர்.

பிரதி அமைச்சரைப் பாராட்டும் வகையில், அப்புத்தளை நகர் விழாக்கோலம் பூண்டிருந்தது. விழா ஆரம்பமாவதற்கு முன் நகர முதல்வர் சுமித் சமயதாச தலைமையில் மேளதாள வாத்திய இசைகளுடன் பிரதி அமைச்சர் நகர் ஊடாக ஊர்வலமாக விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

இங்கு பிரதி அமைச்சர் உரையாற்றுகையில்;

சர்வதேச அங்கீகாரத்துடன் எனக்கு வழங்கப்பட்ட "கலாநிதி" பட்டத்தைவிட தற்போது நடைபெறும் பாராட்டு விழாவினைக் கண்டு உள்ளம் பூரிப்படைகின்றேன். இவ்விழா பதுளை மாவட்ட மண்ணில் நடைபெறுவதையிட்டுப் பெருமைப்படுகின்றேன். ஆன்மீக, சமூக, வர்த்தக சமூகத்தினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் இணைந்து இவ்விழாவினை நடாத்தியிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகின்றது.

வெவ்வேறு கட்சிகளின் மூலம் உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவாகியிருக்கும் எமது சமூக உறுப்பினர்கள் அனைவருமே என்னுடன் இன்று இணைந்திருக்கின்றனர். தற்போது வெலிமடை, ஊவா - பரணகம, சொரணாதொட்டை ஆகிய பகுதிகளின் பிரதேச சபை உறுப்பினர்கள் மூவரும், எனது தலைமையை ஏற்றிருக்கின்றனர்.

என்னைப் பொறுத்தவரையில் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க பேதங்கள் என்னிடம் இல்லை. சமூகமே எனக்கு பிரதானம். அச்சமூகத்தைப் பாதுகாக்க வேண்டும். அச்சமூக மேம்பாட்டிற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டும். இதுவே, எனது இலக்கு. கட்சிகள், தொழிற்சங்கமென்று எமது சமூகத்தை கூறுபோடுவதை என்னால் எவ்வகையிலும், அனுமதிக்க முடியாது" என்றார்.

அப்புத்தளை நகர சபைத் தலைவர் சுமித் சமயதாச தமதுரையில்;

எமது அரசின் வேலைத்திட்டங்களை தோட்டப்பகுதிகளில் மேற்கொள்வதற்கு தரகு முறைமையே, இதுவரை பின்பற்றப்பட்டு வந்தது. நடைமுறைப்படுத்தப்படும் திட்டம் அரசின் வேலைத்திட்டமென்பதையே தோட்டத் தொழிலாளர்கள் அறியாதிருந்துள்ளனர். ஆனால், இனிமேல் அத்தகைய தரகு முறைமை அவசியமில்லை.

தோட்டத் தொழிலாளர்களுக்கான ஏகோபித்த தலைவரான வடிவேல் சுரேஷ், எம்முடன் இருக்கின்றார். அவர் மூலமாக நேரடியாகத் தோட்டங்களுக்குள் சென்று தோட்டத் தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாகவுள்ளது. இத்தலைவர் கிடைக்க தோட்டத் தொழிலாளர்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும். இவரது சேவை நலனைப் பாராட்டி சர்வதேச பல்கலைக்கழகம் வடிவேல் சுரேஷுக்கு `கலாநிதி' பட்டத்தினை வழங்கியிருக்கின்றது. எமது ஜனாதிபதிக்கு மிக நெருக்கமாக இவர் இருந்து வருவதனால் பல கோடி ரூபா செலவில் வேலைத்திட்டங்களை இவர், மேற்கொண்டு வருகின்றார் என்றார்.

பிரதேச சபை உபதலைவர் எஸ்.கே. நமசிவாயம் தமதுரையில்;

"கலாநிதி" பட்டம் பெற்றிருக்கும் எமது பிரதி அமைச்சர், நாட்டின் ஜனாதிபதியின் பெரு நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். அதனால், அவர் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்களை எமது பகுதியில் ஆரம்பிக்க முடியும். இப்பகுதியின் விகாரகலை, ரொகாம்டன் ஆகிய தோட்டங்களின் தொழிற்சாலைகள் நீண்ட காலமாகவே மூடப்பட்டுக் கிடக்கின்றன. ஆகையினால், இத் தொழிற்சாலைகளில் தொழிற் பேட்டைகளை ஆரம்பித்து, ே தாட்ட இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க ஆவண செய்ய வேண்டும்ீீ என்றார். மாற்றுக் கட்சிகளின் மூலம் வெலிமடை, ஊவா - பரணகம, சொரணாதொட்டை பிரதேச சபை உறுப்பினர்களான இராசலிங்கம், முரளிதரன், சந்திரசேகரன், ஆகிய மூன்று பேரும், பிரதி அமைச்சருடன் இணைந்ததுடன், தமக்கு வாக்களித்த மக்கள் பயன்படும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப் பிரதி அமைச்சர் தமக்கு உதவ வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.

Email this page Your Opinion Print this page
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடமிருந்து வெளிப்படையான தீர்வை எதிர்பார்க்க முடியாது
தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்களுடன் அமெரிக்க உயரதிகாரி திடீர் சந்திப்பு
கொழும்பில் அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு வெளியிடங்களிலிருந்து லொறிகள் வரவில்லை
கருணாரட்ணம் அடிகள் படுகொலைக்கு நோர்வே அரசு கடும் கண்டனம்
மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகத்திடம் எடுத்துச்செல்வதில் பெரும் பங்களிப்பு வழங்கியவர்
முகமாலையில் கவசப்படையணி முன்னேற முயற்சி முறியடித்ததாக விடுதலைப் புலிகள் தெரிவிப்பு
ஆனைவிழுந்தான் பகுதியில் கிளைமோர் தாக்குதல் பூநகரி ப.நோ.கூ.ச. பணியாளர் இருவர் காயம்
இராணுவத்திலிருந்து தப்பியோடியோருக்கு அரசாங்கம் மீண்டும் பொதுமன்னிப்பு
ஈரான் ஜனாதிபதியின் தெற்காசிய விஜயம் அமெரிக்கா முன்வைக்கும் `நிபந்தனைகள்'
நிதி உதவிக்காக ஈரான், சீனா பக்கம் கவனத்தை திருப்பியுள்ள இலங்கை
அரசின் மனித உரிமை மீறல்கள் உலகிற்கு தெரியவருவதை தடுக்கவே கருணாரட்ணம் அடிகள் கொல்லப்பட்டார்
முல்லைத்தீவில் விமானத் தாக்குதலில் இளைஞன் பலி; 2 சிறுமிகள் உட்பட 8 பேர் காயம்
மனைவியை பிரிந்து வாழும் மனநோயாளியை காணவில்லை ; சகோதரி பிரதியமைச்சரிடம் புகார்
வங்கி ஊழியர் சங்கம், வர்த்தக ஊழியர் சங்கத்துடன் இணைந்து ஐ.தொ. சம்மேளனத்தின் மே தின நிகழ்வுகள்
வர்த்தகர் வீட்டில் கைக்குண்டு மீட்பு
கருணாரட்ணம் அடிகளாரின் படுகொலைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடும் கண்டனம்
தேயிலை கொழுந்துகளை பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி மயங்கி விழுந்து மரணம்
கிழக்கில் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணி இன்று ஆரம்பம்
கடத்தப்பட்ட இருவர் குறித்து நடவடிக்கையெடுக்குமாறு உத்தரவு
இராணுவ வீரர் கத்திக் குத்துக்கு பலி
ஆயுதங்கள் சகிதம் ஐந்து கொள்ளையர் செட்டிகுளத்தில் பொலிஸாரால் கைது
பட்டவத்தை ஆட்டோ விபத்தில் ஒருவர் பலி, ஐவர் படுகாயம்
தமிழ் பேசும் சமூகத்தின் ஒற்றுமைக்காக அர்ப்பணித்திருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றியடைவது நிச்சயம்
தரமான தேயிலையை உற்பத்தி செய்யாத தொழிற்சாலைகளின் அனுமதி ரத்து செய்யப்படும்
பிரிட்டிஷ் பிரஜை கடலில் மூழ்கி மரணம்
"எமது சமூக அமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால் மூத்தோர் பராமரிப்பு பாரிய சுமையாக மாறி வருகின்றது"
அரிசி விலைப் பட்டியல் காட்சிப்படுத்தப்படாமையினால் பாவனையாளர்களுக்கு பெரும் இடையூறு
நாடுபூராவும் ஜனநாயக சூழலை உருவாக்கும் நடவடிக்கையையே ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்
வழிகாட்டல் முறையாக முன்னெடுக்கப்படுமாயின் ஒவ்வொரு குடும்பமும் சமாதானத்தை அனுபவிக்க முடியும்
22 வருடங்கள் நரிகளாக இருப்பதை விட 2 ஆண்டுகள் சிங்கமாக இருக்க விரும்புகிறேன்
வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலமே முஸ்லிம் முதலமைச்சரை பெற்றுக் கொள்ள முடியும்
வங்குரோத்தான அரசியல் கட்சிகளை நம்பி ஏமாறாமல் ஐ.ம.சு. முன்னணியையே மக்கள் ஆதரிக்க வேண்டும்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எந்த இனம் வெற்றி பெற்றாலும் மற்ற இனத்தின் உதவியுடனேயே ஆட்சியமைக்க முடியும்
தமது மண்ணை பேரினவாதிகளின் கெடுபிடிகளிலிருந்து மீட்பதற்காக தமிழ் மக்களும் இம்முறை ஐ.தே.க.வுக்கே வாக்களிக்க முடிவு
சக இன மக்களின் நிலங்களை சுவீகரிப்பது கூட்டான ஆட்சிமுறைக்கு விரோதமானது
இம்முறை மேதின ஒன்றுகூடல்கள் எவையுமில்லை
கல்விமாணி கற்கைநெறி பரீட்சை நேர சூசியில் ஏற்பட்ட மாற்றத்தினால் மாணவர் பாதிப்பு
அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை உலகிற்கு வெளிப்படுத்தியவர் கருணாரட்ணம் அடிகள்
படுகொலை செய்யப்பட்டோரின் உடல்களை காகங்கள் குதறிய வண்ணம் இருந்ததை கண்டேன்
சாய்ந்தமருது நெடுஞ்சாலை புனரமைப்பு பணியை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com