*பிரதிக் கல்வி அமைச்சர் மு.சச்சிதானந்தன்
கல்விசார் ஊழியர்கள் மூலம், சரியான முறையில் சமாதானத்துக்கான வழிகாட்டல் முன்னெடுக்கப்படுமாயின், ஒவ்வொரு குடும்பமும் நிரந்தர சமாதானத்தை அனுபவிக்க முடியுமென பிரதிக் கல்வி அமைச்சர் மு.சச்சிதானந்தன் தெரிவித்தார்.
9740 பாடசாலைகள், 93 வலயக் கல்வி அலுவலகங்கள் மற்றும் 2,18,000 கல்விசார் ஊழியர்களின் துணையுடன் இப்பணியை துரிதமாக முன்னெடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையிலுள்ள ஒரு கோடியே 80 இலட்சம் குடும்பங்களுக்கும் இச் சமாதானம் முறையாக சென்றடைய வேண்டுமானால், ஆசிரியர்கள்,கல்விப் பணிப்பாளர்கள், சர்வகலாசாலை விரிவுரையாளர்கள், கல்வி அமைச்சு, மாகாண கல்வி அமைச்சு, கல்வித் திணைக்களம் போன்றவை கூட்டாக முறையான சமாதான செயலமர்வுகளை நடாத்தி தமிழ், முஸ்லிம், சிங்கள சமய கலாசார விழுமியங்களுக்கு ஏற்ப சாத்தியமான அணுகு முறையுடன் செயல்படுமிடத்து துரிதமாக இந்நாட்டில் சமாதானம் ஏற்பட வாய்ப்புண்டு எனவும் அவர் தெரிவித்தார். எனவே, சமாதானம் சமாதானம் என சொல்லித் திரிவதால் எப்பலனும் ஏற்படப் போவதில்லை.மாறாக இதய சுத்தியுடன் செயற்படும் போதுதான் உண்மையான பயனுள்ள சமாதானத்தை காண முடியும் எனவும் பிரதிக் கல்வி அமைச்சர் எம்.சச்சிதானந்தன் குறிப்பிட்டார்.