|
அரிசி விலையை அரசு கட்டுப்படுத்தியதையடுத்து விலை காட்சிப்படுத்தும் நடைமுறையை வர்த்தகர்கள் கைவிட்டுள்ளனர்.
கண்டி மத்திய சந்தை உட்பட பொதுவாக எல்லா இடங்களிலும் அரிசியின் பெயரும் விலையும் குறிக்கப்பட்டு அவை பெரிதாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால், அரசு அரிசியின் விலையை கட்டுப்படுத்தியதையடுத்து பகிரங்கமாக காட்சிப்படுத்தப்பட்ட அரிசி மூடைகள் மாயமாக மறைந்துள்ள அதேவேளை, எந்த வர்த்தகரும் விலைகளைக் காட்சிப்படுத்தாத நிலை காணப்படுகிறது. இதனால், பாவனையாளர்கள் பாதிப்படைவதுடன், ஏமாற்றமடையக்கூடிய சூழ்நிலையும் காணப்படுகிறது. |