பெந்தோட்டைக் கடலில் உல்லாசமாக நீராடிய பிரிட்டிஷ் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி மரணமான சம்பவம் திங்கட்கிழமை இடம்பெற்றது.
இறந்தவர் எட்வேட் மிரின் (60 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உல்லாசப் பயணம் மேற்கொண்டு இங்கு வந்த இவர் இங்குள்ள ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இவரது சடலம் காலி கராப்பிட்டிய ஆஸ்பத்திரி சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. வழமையாக இவர் மாலையில் கடலில் குளிப்பவர் என்றும் சம்பவ தினம் குளித்தபோது இவ்வாறு மரணமானதாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.