வவுனியா செட்டிகுளம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஆயுதங்கள் சகிதம் ஐந்து கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவலின் பேரிலேயே இந்த ஐந்து கொள்ளையர்களையும் பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் வவுனியா நகருக்கு சமீபமாகவுள்ள தேக்கங்காடு மற்றும் தோணிக்கல் பகுதிகளைச் சேர்ந்தவர்களெனத் தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா , செட்டிகுளம் பிரதேசங்களில் அண்மைக் காலத்தில் இரவு நேரங்களில் நடைபெற்ற கொள்ளைகளில் இவர்களே சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிப்பதாகத் தெரிவிக்கும் பொலிஸார் இவர்கள் மீதான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட நகைகள் குறைந்த விலைக்கே கடைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. இவர்கள் ஒரு குழுவாகச் செயற்பட்டு வருகின்றனர். 20 பேர் இந்தக் குழுவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐவர் கொண்ட குழுக்களாக இவர்கள் இரவு நேரக் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளதும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.