காலி பூஸா பகுதியில் இராணுவ வீரர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
இரத்தினபுரி- குருவிற்ற இராணுவ முகாமில் பணியாற்றிவரும் இவர் புத்தாண்டு விடுமுறைக்கு சொந்த ஊரான பூஸாவுக்கு வந்திருந்தார்.
பழைய தகராறு காரணமாக ஒருவருடன் தர்க்கப்பட்டதாகவும் அதனையடுத்து கத்திக் குத்துக்குள்ளானதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவரது மரண விசாரணையை காலி மேலதிக நீதிவான் சாஹிமா விஜயபண்டார மேற்கொண்டிருந்தார்.
இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையார் எனவும் 34 வயது எனவும் தெரிவிக்கப்பட்டது. சந்தேகநபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்செய்யுமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.