கிழக்கு மாகாண தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று புதன்கிழமை முதல் தபால் நிலையங்கள் மூலம் விநியோகிக்கப்படவிருப்பதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கான பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 2 ஆம் திகதி வரை வாக்காளர் அட்டை விநியோகம் நடைபெறுமெனவும் வாக்காளர் அட்டை கிடைக்காதோர் தேசிய அடையாள அட்டையைச் சமர்ப்பித்து அதனை தபால் நிலையங்களில் பெற முடியுமெனவும் மாவட்ட உதவித் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
வாக்காளர் அட்டைகளை வழங்குதலை துரிதப்படுத்துவதே இதற்கான காரணமாகும்.
எதிர்வரும் 27 ஆம் திகதி வாக்காளர் அட்டை விநியோகிக்கும் விசேட தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தபால் மூல வாக்களிப்பு தினம் எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.